யார் இந்த துவாரபாலகர்கள்?!

5faa90fc3fa4d4fd9bc76eee56c61e46

துவாரப்பாலகர்கள்னா வாயிற்காப்பாளர் என அர்த்தம் ஆகும். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது “Security” என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார பாலகர்கள். ஆண் தெய்வத்திற்கு ஆண் துவாரபாலகர்களும், பெண் தெய்வத்திற்கு பெண் துவாரபாலகர்களும் இருப்பர். இந்த துவாரபாலகர்கள் சேவகர்கள், போர் வீரர்கள், அசுரர்கள் என பல்வேறு வடிவத்தில் இருப்பர். துவார என்பது “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும்.

சிவன் கோவிலில் இருப்பது சண்டி – முண்டி,சண்டன் – பிரசண்டன், திரிசூலநாதர் – மழுவுடையார் போன்ற ஐந்து இணை துவாரபாலகர்கள்  இருப்பர். சில கோவில்களில் நந்திதேவர் துவாரபாலகராக இருப்பார்.

விஷ்ணு கோவில்களில் ஜெயன் -விஜயன் என இருவர் மட்டுமே இருப்பர். 

சக்தி கோவில்களில் அரபத்ரா, சுபத்ரா என இருவர் துவாரபாலகிகளாக இருப்பர்.

கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் கோயில். எப்படி ஒரு சிசிடிவி கேமரா மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப் படுகின்றனவோ, அதேபோன்று கோயிலில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும், துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப்படுகின்றன.

துவாரபாலகர்களிடம் அனுமதி வாங்கிய பிறகே இறைவனை தரிசிக்க வேண்டும். கடவுள்களின் சிலாரூபத்துக்கு எந்தளவுக்கு மரியாதை செலுத்துகிறோமோ அந்தளவுக்கு துவாரபாலகருக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.  துவாரபாலகர்களின் சிலைகளை தொடுவதோ, விபூதி, குங்குமம் மாதிரியானவற்றை கொட்டுவதோ கூடாது….

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews