விநாயகர் சதுர்த்தி வந்ததன் கதை!

பழங்காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் பல வரம் பெற்றதால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்கள் விலங்குகள் மற்றும் ஆயுதங்களாலால் யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

                பின் எல்லா தேவர்களும் ஒன்றாக சேர்த்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும் மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

3bb3416ab3b055e2bf60e6d3264cd7b7

                அப்போது விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடுமையான போர் நடந்தது. இறுதியில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவிவிட்டார். அசுரனோ மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

                பின் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன் மூலமாக அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்றுமுதல் தான் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் அனைத்து பிரச்சனைகளூம் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews