நாளைமுதல் திருப்பதி திருமலையில் தெப்போற்சவம்..

b49dc6dcda24edfaec3b5efa9f1a6010

வருடந்தோறும் திருப்பதி திருமலையில் நடக்கும். இந்த வருடத்திற்கான தெப்போற்சவம் நாளை வியாழக்கிழமை வருடாந்திர தொடங்குகிறது. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதனை முன்னிட்டு ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதன்படி நாளை வியாழக்கிழமை (5/3/2020)முதல் மார்ச் 9-ந்தேதி வரை திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 5,6-ந்தேதிகளில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை, மார்ச்.7,8,9-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை, மேலும் 9-ந்தேதி பவுர்ணமி அன்று நடைபெறும் கருட சேவையும் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

50199d5d9a6999e476961f6b7244d3df

வியாழக்கிழமை (5/3/2020)நாளை முதல் நாள் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் உலா வருகிறார்.

6-ந்தேதி ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணசுவாமி தெப்பத்தில் உலா வருவார்.

7,8,9-ந்தேதிகளில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் பவனி வருகிறார். என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews