நடக்கும் செயல்களை வைத்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு போகாதீர்கள்

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரொனாவின் கடும் கோரதாண்டவத்தால் அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

587cbd433eb26a38b35908c3b21ace79

கிறித்தவர்கள் புனித நகராக வணங்கி செல்லக்கூடிய இத்தாலியே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் பல கோவில்களில் ஹோமம் செய்யப்படுகிறது, பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. காவல்துறையிடம் அடிவாங்கி கூட இஸ்லாமியர்கள் பலர் இறைவனை தொழ மசூதி செல்கின்றனர்.

இப்படி எல்லா மக்களும் ஒற்றுமையுடன் சுவாமி தரிசனம் செய்து வந்தாலும் கொரோனா மறைவதாக தெரியவில்லை. இதனால் உயிர்ப்பலிகள் ஒரு புறம் ஏற்பட்டாலும், பொருளாதார ரீதியாக ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் மக்களால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுவரை தீவிரமாக இறைவன் இருக்கிறார் என்று நினைத்த பலரும் கூட என்னடா இந்த கொரொனா இந்த பாடு படுத்துகிறது இறைவன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறானே என கடவுள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். கோவில்களே பூட்டப்படும் நிலைக்கு சென்று விட்டதே இறைவன் உண்மையிலேயே இருக்கின்றானா என பேசும் நிலைக்கு சென்று விட்டனர்.

உண்மையில் இது எல்லாமே இறைவனால் ஏற்படுத்தப்படும் ஒரு காலக்கணக்குத்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. இக்காலத்தில் இந்த நேரத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானிப்பவன் தான் இறைவன். கர்மாவின்படியே இவ்வுலகம் இயங்குகிறது. அவரவர் கர்மவினைக்கேற்ப இந்த கொடூர வைரஸ் காலத்தில் படைக்கப்பட்டு பிறந்து கஷ்டப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஊழ்வினைப்பயன். இது சில நாட்களில் சரியாகிவிடும் இதனால் வீணாக மனம் வருந்தி கடவுள் நம்பிக்கையை இழக்க தேவையில்லை.

இதற்கு முன் அந்நியர்கள்படையெடுப்பின் போது திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல வருடம் பூட்டிக்கிடந்துள்ளது. டில்லி சுல்தானிடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலை 50 வருடங்கள் இருந்துள்ளது. 50 வருடங்கள் கழித்து கைப்பற்றப்பட்டுத்தான் கோவிலில் மீண்டும் வைக்கப்பட்டது வரலாறு. இது போல கடவுளே கோவிலை விட்டு காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்து அருள்பாலிக்கிறார்.

கர்மவினைகளால் சூழ்ந்ததுதான் இவ்வுலகம். ஒவ்வொரு சூழ்நிலையையும் கடவுள் தான் உருவாக்குகிறார்.

தற்போது மனிதனால் எல்லை மீறி செய்யப்பட்ட பல விசயங்களை இந்த கொரோனா காலம் கட்டுப்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் அனைவரும் நேரம் செலவிடுகின்றனர், மது குடிக்கவில்லை, வளிமண்டலம் தூசு, புகை இன்றி மிக சுத்தமாக உள்ளது. இது போல எத்தனையோ அற்புத விசயங்களை இறைவன் செய்கிறான் இதுதான் உண்மை.

அதனால் கடவுள் இல்லை என்று கலங்காமல் இதுவும் கடந்து போகும் கடவுள் காப்பாற்றுவான் இது ஒரு கிரகரீதியான நிகழ்வு என்று நம்புங்கள். கிரகங்களை படைத்தது கடவுள், நிச்சயம் அந்த கிரகங்களிலிருந்து இந்த பூமியை காப்பாற்றுவான்.கடவுள் நம்பிக்கையை எப்போதும் இழந்து விடாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.