இந்தாம்மா கருவாட்டுக் கூடை.. முன்னால போ…! கிரியேட்டிவ்-ன் உச்சம் தொட்ட பாடல்

இப்போதுள்ள சினிமா பாடல்களில் பல கோடிகளில் செலவழித்து பிரம்மாண்டம், கிராபிக்ஸ் என்று தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரே ஒரு டயலாக் மூலம் மொத்த பாடலும் ஹிட் ஆக்கி இன்றுவரை பேச வைத்திருக்கிறது என்றால் அது சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி..“ பாடல். 1978-ல் சிவக்குமார்-சுமித்ரா நடித்த சிட்டுக்குருவி படத்தை தேவராஜ்-மோகன் இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள்.

அப்போதுள்ள சினிமாக்களில் பாடல்கள் என்றால் ஒரேமாதிரி போய்க்கொண்டிருந்த வேளையின் ராஜாவின் ராஜாங்கத்தில் இந்தப் பாடல் ஒரு மேஜிக் செய்தது. எஸ்.பி.பி., பி.சுசீலா இணைந்து பாடிய இந்தப்பாடல் வித்தியாசமாக எடுக்கப்பட்டு பட்டி தொட்டியெங்கும் புகழ் பரப்பியது.

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவையே ஸ்தம்பிக்க வைத்த இசைஞானி… இந்தப் பாட்டு தானா அது?

அதன்படி, தலைவனும் தலைவியும், சென்னை பாரிமுனை வரை செல்லும் பல நிறுத்தங்களைக் கொண்ட பேருந்தில் தலைவனை, கற்பனை தலைவனும், தலைவியை, கற்பனை தலைவியும் சீண்டியும் ரசித்தும் பாடும் பாடலாக அமைந்திருந்தது. பாடலின் நடுவில், பேருந்தை விட்டு இறங்கி மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் பிருந்தாவன் கார்டன் வரை சென்று டூயட் பாடலை தொடர்ந்துவிட்டு, மீண்டும் அதே சென்னை நகர பேருந்தில் இடையில் ஏறிக்கொள்வதாக படமாக்கியிருப்பார்கள்.

காதலர்கள் எந்த இடத்திலும், அக்காலத்தில் பெரும்பாலும் கண்களால் பேசிக் கொள்வார்கள் என்பதை இப்பாடல் காட்சி நிரூபணமாக்கியது. இதில் முக்கியமான ஒன்று கவனிக்க வேண்டியது என்னவென்றால் பாடலின் இடையே வரும் கண்டக்டரின் வசனம் தான். “இந்தம்மா கருவாட்டுக் கூட முன்னால போ.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு“ நல்லா சொன்னேள் போங்கோ என்ற வசனங்கள் மூலம் பாடலுக்கு இன்னும் அழகைக் கூட்டியிருப்பார்கள். வாலியின் வரிகள் இதில் இளமை ததும்ப விளையாடி இருக்கும்.

இந்தப்பாடல் தமிழ் சினிமா பாடல்களில் புது டிரெண்டை உருவாக்க தொடர்ந்து பாடல்களில் வித்தியாசம் காட்டத் தொடங்கினார்கள் இயக்குநர்கள். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அட மாமரக்கிளியே… என்ற பாடலும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பொக்கிஷங்கள்.

உலக நாயகன் கமல்ஹாசனும் தான் நடிக்கும் பாடல் காட்சிகளில் சிறு சிறு காமெடிகள் செய்துவிட்டுப் போவார். கூர்ந்து கவனித்தால் அவை மிகவும் இரசிக்கும்படியாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...