சிரஞ்சீவி முதல் அல்லு அர்ஜுன் வரை!.. லாவண்யா திரிபாதி திருமணத்தில் குவிந்த டோலிவுட் திரையுலகம்!..

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் வருண் தேஜிற்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் நேற்று இரவு இத்தாலியில் ராயல் வெட்டிங் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல டோலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் தான் வ்ருண் தேஜ். முகுந்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து காஞ்சே, ஃபிடா,தோலி பிரேமா, கடலகொண்ட கனேஷ் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

லாவண்யா திரிபாதி – வருண் தேஜ் திருமணம்

லாவண்யா திரிபாதி ரக்சஷாய் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

வருண் தேஜும் லாவண்யா திரிபாதியும் இரு படங்களில் சேர்ந்து நடித்த நிலையில் இருவரும் காதலிப்பதாக கிசு கிசு பரவியபோது இருவரும் முதலில் அதனை மறுத்து வந்தாலும். பின்னர் இருவரும் காதலிப்பதாக அறிவித்து சென்ற ஜுன் மாதம் ஹைதராபாதில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இத்தாலியில் கோலாகலம்

அதனை தொடர்ந்து இருவருக்கும் நேற்று இரவு இத்தாலியில் திருமணமும் நடந்து முடிந்தது. அதன் புகைபடங்கள் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் அவரது தம்பி பவன் கல்யாண், மகன் ராம் சரண் நடிகர் அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பல தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் இத்தாலிக்கே சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

டோலிவுட் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

கோனிடேலா குடும்பத்தின் திருமணமான இதில், பிரபல தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று திருமணத்தை வெளிநாட்டில் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர்.

கோனிடேலா குடும்பம் மற்றும் ராம்சரண் மனைவியின் உபாசனாவின் காமினேனியின் குடும்பம் என ஒட்டுமொத்த குடும்பங்களும் இந்த திருமணத்துக்காக இத்தாலி சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமணத்திற்க்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வருண் தேஜ் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நடிகர் தான். ஆனால், லாவண்யா தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பரிச்சயமானவராக இருக்கின்றார். பல கோடி செலவில் பிரம்மாண்டமாக இத்தாலியில் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews