அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. அப்படியே குழந்தை பாடுற மாதிரி குரல்.. உலக நாயகனின் முதல் குரலாக ஒலித்த M.S.ராஜேஸ்வரி!

எந்தத் தலைமுறை கிட்ஸ்-ஆக இருந்தாலும் களத்தூர் கண்ணம்மா படத்தை மறக்கவே முடியாது. ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த இப்படத்தில் சிறுவயது பாலகனாக அறிமுகமாகி இன்று இந்திய சினிமா உலகையை ஆண்டு கொண்டிருக்கும் உலக நாயகனின் முதல் படம். பால்வடியும் முகத்துடன் இப்படத்தில் வரும் பாடலான அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. என்ற பாடலைக் கேட்டு உருகாதவர் எவரும் இல்லை.

மிகுந்த பக்தியுடன் மெய்மறந்து கமல்ஹாசன் மழலைக்குரலில் பாடும் இப்பாடலின் குரலுக்குச் சொந்தக் காரர் பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. 1950-60களின் புகழ்பெற்ற ஹிட்ஸ் பாடல்களின் குரலுக்குச் சொந்தக் காரர். இப்போது எஸ்.ஜானகியை நாம் எப்படி கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு தனது குரலில் தனித்துவத்துடன் பாடியிருப்பார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் பாடி உருக வைத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இனி குழந்தைப் பாடல் என்றாலே கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா (மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) போன்ற இன்றளவும் ரசிக்கக் கூடிய பாடல்களின் குரலுக்குச் சொந்தக் காரர்.

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி எஸ்பிபியுடன் பாடிய அனைத்து கால இனிமைப் பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே என்ற பாடலை இன்றும் 80களின் ரசிகர்கள் எப்போது கேட்டாலும் கொண்டாடத் தவறியதில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...