இந்த முறையாவது ‘சிஎஸ்கே’வை நம்பலாமா? ஏக்கத்தில் ரசிகர்கள்…!

தற்போது நம் நாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் இது தமிழக ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள சீசனாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்பியனாக ஜொலித்த நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஏமாற்றம் அளித்துள்ளது.

ஏனென்றால் இந்த முறை கேப்டன் பதவியில் தோனி இல்லாததும் ரசிகர்களிடையே பெரும் வருத்தமாக காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து ரசிகர்களை மேலும் காயப் படுத்திக் கொண்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டே காத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து நம் சிஎஸ்கே அணி போட்டியிடுகிறது.

மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் தற்போது பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்குமா என்பதை ஆட்ட இறுதியில் காணலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...