ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுமைபடுத்துகிறார்கள்… ரோபோ சங்கர் கொந்தளிப்பு…

விஜய் டிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகம் ஆகி வெள்ளித்திரைக்குப் போனவர் ரோபோ சங்கர். நடிகர் தனுஷின் ‘மாரி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரின் மகளான இந்திரஜாவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ரோபோ சங்கர் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ஆடம்ஸ் இயக்கும் ‘கேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் இயக்குனர் கொடுமை படுத்துவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், ஷூட்டிங்காக ஊட்டிக்கு வந்தா எத்தனை மணிக்கு கூப்பிடனும். மெட்ராஸ்லயே பனிக்காலம் என்றால் அப்படி இருக்கும். இங்க ஊட்டியில் கண்ட இடமெல்லாம் குளிருது, கை கால் எல்லாம் சுருங்கி போகுது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் காலையில் ஆறு மணிக்கே இயக்குனர் ஆடம்ஸ் எங்களை ஷூட்டிங்கிற்கு கூப்பிடுகிறார்.

நான் மட்டும் இல்ல, ஸ்ரீமன் அண்ணன், தம்பி ராமையா, கோவை சரளா, மாறன் அண்ணன், கலையரசன் என அனைவருக்கும் இதே நிலைமைதான். எனக்கு அவ்ளோ கோபம் வருகிறது. தினமும் ஊசி போட்டுகொண்டு நடிச்சிட்டு இருக்கிறேன் என்று கையில் ஊசி போடும் இடத்தை காட்டினார்.

மேலும் வெள்ளத்தில் கால் அடிபட்டு வீங்கி இருக்கு. ஆனாலும் நடிக்க வந்திருக்கேன். ஆனால் இயக்குனர் ஆடம்ஸ் காலை 6 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சாரு அப்டினா மறுநாள் காலை 6 மணி வரைக்கும் எடுக்கிறார் எங்களை நடிக்கச் சொல்கிறார். அதற்கு பகலில் எடுக்கலாம் இல்லையா. படத்தோட டைட்டில் கேட்டா சொல்லமாட்டீங்குறார். சோத்த வாயில வைக்கிற நேரத்துல கூப்பிட்றர், வாயில வச்சதும் போங்கன்னு சொல்றார். அவ்ளோ கொடுமை படுத்துகிறார். இவர் ஆஸ்கர்கா படம் எடுக்கிறார். ஆடியன்ஸ்காக தான எடுக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்துல கோவை சரளா அம்மாவை ஸ்ட்ரெட்சர்ல கூட்டிட்டு வருவாங்க. ஸ்ரீமன் அண்ணாவிற்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டது. தம்பி ராமையா தவ்வி தவ்வி வராரு. பனிக்காலத்துல இப்படியா பண்றது, டையதுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வைக்க வேணாம். கொஞ்சம் கேப் விட்டா குரங்கு வேற வந்துடுது என்று கூறிக்கொண்டே இதோ வந்து தொலைக்கிறேன் என்று சொல்கிறார்.

இதை பார்த்த இணையவாசிகள் என்ன இவர் இப்படி பேசுகிறாரே என்னதான் ஆச்சு என்று கேட்டு கொண்டு வருகின்றனர். மேலும் அவர் பேசும் விதத்தைப் பார்த்து இவர் காமெடிக்காக பேசுகிறார் மற்றும் ‘கேன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.