புளு சட்டை மாறன் என்ன போட்டார்ன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க.. அட்லி பார்த்தா என்ன நினைப்பாரு

அடுத்த படத்துல ஷாருக்கான்.. ஜூவுல புலியை பாத்துக்கற ஆளா இருந்தா.. இவனுங்க எல்லாம் தியேட்டருக்கு ஆளுக்கு ஒரு புலியோட வந்தாலும் வருவானுங்க போல.. இவனுங்களை இப்பவே.. போலீஸ் அடையாளம் கண்டுபுடிச்சு வச்சிக்கறது நல்லது என புளுசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஜவான் திரைப்படம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. பல கதைகளை ஒன்று சேர்ந்து அட்லி படம் எடுத்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனாலும் பாலிவுட் ரசிகர்களை பொறுத்தவரை படம் பார்க்க நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். பாலிவுட்டில் ஷாருக்கானின் ரசிகர்கள் பலர், ஜவான் படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள்.

இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஷாருக்கானின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, ஆக்‌ஷன். அனிருத்தின் பின்னணி இசை,ஒளிப்பதிவு, ஆக்சன் காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளன.

ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு!.. இந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறிய அட்லீ!..

விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனைகளின் தரம், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு, மக்கள் தங்கள் வாக்குகளை அரசை தேர்ந்தெடுக்க சரியாக பயன்படுத்த வேண்டும் போன்ற விஷயங்கள் அற்புதமாக பாலிவுட்டில் காட்சிபடுத்தி உள்ளார் அட்லி. இதனால் படம் எத்தனை படங்களின் சாயல் தெரிந்தாலும்,பாலிவுட் ரசிகர்களுக்கு வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

நம்மூரில் ரஜினியின் ஜெயிலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்களோ, அதுபோல் ஜவானையும் பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதன் தாக்கமாக ஜவானில் ஷாருக்கான் போட்ட கெட்டப்பான முகம் முழுவதும் பேண்டஜ் சுற்றிய கெட்டப்பை பல ரசிகர்கள் தியேட்டரில் போட்டு வந்துள்ளார்கள்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் ட்விட் செய்துள்ள புளு சட்டை மாறன், அடுத்த படத்துல ஷாருக்கான்.. ஜூவுல புலியை பாத்துக்கற ஆளா இருந்தா.. இவனுங்க எல்லாம் தியேட்டருக்கு ஆளுக்கு ஒரு புலியோட வந்தாலும் வருவானுங்க போல.. இவனுங்களை இப்பவே.. போலீஸ் அடையாளம் கண்டுபுடிச்சி வச்சிக்கறது நல்லது என்று கிண்டலாக கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews