வைல்டு கார்டுன்னு லேசா நினைச்சியா!.. எப்படி டைட்டிலை தட்டித் தூக்கினேன் பார்த்தியா.. அர்ச்சனா அதிரடி!

VJ Archana: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 14ம் தேதி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடு இன்று ஷூட் செய்யப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா:

இந்த சீசனில் எப்படியாவது பெண் போட்டியாளரை டைட்டில் வெல்ல வைக்க வேண்டும் என நினைத்த பிக் பாஸ் டீம் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான பெண் போட்டியாளர்களை களமிறக்கியது. விசித்ரா, வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, வினுஷா, ரவீனா தாஹா, ஐஷு என ஏகப்பட்ட பெண் போட்டியாளர்கள் மேலும், பவா செல்லதுரை, கூல் சுரேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, நிக்சன், பிரதீப் ஆண்டனி என அதிகம் தெரிந்த முகங்கள் மற்றும் குறைவாக தெரியாத முகங்களுடன் களமிறங்கியது.

இதில், இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து விளையாடியவர்களை விட வைல்டு கார்டாக உள்ளே நுழைந்த தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் அதிகளவில் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினர்.

இன்னொரு பக்கம் புல்லி கேங்கை ஆரம்பித்து ஒவ்வொரு சீசனிலும் நெகட்டிவிட்டியை பரப்பி ஃபைனலுக்கு செல்லும் நபராக மாயா உருமாறினார். கடந்த சீசனில் விக்ரமன் மற்றும் அசீம் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், கடைசியில் திடீரென அசீமுக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைத்தது. இந்நிலையில், இந்த சீசனில் நிலைமை எப்படி இருக்கும் என ரசிகர்கள் கடைசி நேரம் வரை தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

50 லட்சம் பரிசு:

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசியில் 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக வீட்டிற்குள் இருந்தனர். விஷ்ணு, மாயா, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா உள்ளிட்டவர்களுக்கு சிகை அலங்காரம், புது டிரெஸ் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கிராண்ட் ஃபினாலே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சீசனில் இந்த 5 பேரில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை பல தடைகளை தாண்டி தட்டித் தூக்கியது அர்ச்சனா தான் என்கிற தகவல் தான் தற்போது கசிந்துள்ளது. மேலும், ரன்னர் அப்பாக மணி வந்துள்ளார் என்றும் மாயா, விஷ்ணு மற்றும் தினேஷ் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மாலை ஒளிபரப்பாகும் கிராண்ட் ஃபினேலே நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.