பிக் பாஸ் ஷாரிக் நடிப்பில் ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ்… தேதி எப்போ தெரியுமா…

ஷாரிக் ஹாசன் குணச்சித்திர நடிகர்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மூத்த மகனாவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பென்சில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவர் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். அதன் பின்பு கடந்த ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிபி ஜோடிகள் நடன போட்டியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். அதன் மூலமாக நிறைய பட வாய்ப்புகள் ஷாரிக்க்கு கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது கிளாப்-இன் பில்மொடைன்மெண்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே. ஆர் எழுதி இயக்கும் திரைப்படம் ‘நேற்று இந்த நேரம்’. பிக் பாஸ் புகழ் ஷாரிக் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே. ஆர் இணைந்து எழுதியுள்ளார். விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு கோவிந்த். ந மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் , அறிவு ஆதித்யா, ஆர். கே. ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். இபடத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.