அந்த வீடியோவை பார்த்துட்டு விஜய் அப்படி சிரித்தார்.. பிக் பாஸ் ஜனனி சொன்ன சூப்பர் விஷயம்!

லியோ படத்தின் கொண்டாட்டம் ஓய்ந்த நிலையில் அதில் சிரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிக் பாஸ் ஜனனி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் இலங்கையை சேர்ந்த ஜனனி கலந்து கொண்டார். சோசியல் மீடியாவில் பிரபலமானவர் ஜனனி அதன் மூலம் தான் பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடத்தது.

தனது அழகான இலங்கை தமிழ் பேச்சின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார். 70வது நாட்கள் வரை டஃப் கொடுத்து விளையாடி எலிமினேட் செய்யப்பட்டு வெளியெறினார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்ற ஜனனி லோகெஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெற்றி விழாவில் ஜனனி

சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவிலும் நடிகை ஜனனி கலந்து கொண்டிருந்தார். சன் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் இருந்து இதன் மூலம் சன் டிவி ரசிகர்களையும் ஜனனி கவர உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பிக் பாஸின் தீவிர ரசிகர் என்பதை நிருபிக்கும் வகையில், தனது படங்களில் தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களையும் நடிக்க வைத்து வருகிறார். கேபிஒய் தீனா, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி, மாயாவை தொடர்ந்து தற்போது லியோவில் ஜனனியும் சாண்டியும் நடித்துள்ளனர்.

janu

காபி ஷாப் சீனில்

கரு கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்த சீனில் ஜனனி சூப்பராக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி இருந்தார். மிஸ்கின் ஜனனியை தூக்கிப் போடும் காட்சியும் ஜனனியின் தாலியை வைத்துக் கொண்டு சாண்டி துப்பாக்கியில் சுற்றி வெறித்தனம் காட்டும் காட்சிகள் எல்லாம் வேறலெவல்.

விஜய் அப்படி சிரித்தார்

இந்நிலையில், சமீபத்தில் ஜனனி அளித்த பேட்டியில் தான் நடித்த ரீல்ஸ் ஒன்றை பார்த்து விஜய் அப்படி சிரித்தார் என்றும் த்ரிஷா, ப்ரியா ஆனந்த் எல்லாரும் விஜய் சிரிப்பதை பார்த்து என்ன என்று கேட்டதற்கு என் ரீல்ஸை பார்த்து தான் அப்படி சிரித்தார் என்றுக் கூறினேன் என்றார். மேலும், காபி ஷாப்பில் வேலை பார்க்கும் பெண் கதாபாத்திரமாக இல்லாமல், விஜய் சாரின் மகள் சின்ட்டுவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் சூப்பராக இருந்திருக்கும். ஆரம்பத்தில் எல்லாரும் விஜய் மகளாக நான் நடிக்கிறேன் என்றே கூறினர். ஆனால், அது உண்மையில் நடந்திருக்கலாம் என்று பேசியுள்ளார்.

நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க.. கதைக்குதீங்க என்று தான் பேசுவாங்க என இலங்கை தமிழில் நான் பேசியதை பார்த்து விஜய் சார் என்கிட்ட வந்து பேசியது என்னை ரொம்பவே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என ஜனனி கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews