லோஸ்லியாவால் கடுப்பான பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், டிஆர்பி ரீதியாக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் “டசக்கு டசக்கு” என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது.

கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, நீங்கள் காப்பாற்ற விரும்புபவர் யார்? ஏன்? என கேள்வி கேட்டார் பிக் பாஸ். முதல் ஆளாக லோஸ்லியா உள்ளே வந்தார். அவர் கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார்.

9aa623abf84e4a04ce6bbd0f2458c785

அவர் கூறியது “பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல அப்ஸ் அண்ட் டவுன்ஸ் பார்த்தவர் கவின்தான், அவர் நிச்சயம் பைனலில் இடம்பெற வேண்டும்” என்றார்.

கையை ஆட்டாமல் பேசுமாறு பிக் பாஸ் கூற, லாஸ்லியா சிரித்தார். அடுத்து கவினுக்காக பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்று கூற. அவர் சாப்பிட ரொம்ப சீன் போட்டார்.

இதனால் கடுப்பாகிப் போன பிக் பாஸ்’ “லாஸ்லியா இது நாமினேஷன் பற்றியது, விளையாட்டாக இருக்காதீர்கள்” என்று கூற, உடனே லாஸ்லியா மிளகாயினை சாப்பிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews