“பரத்தின் அபார சிக்சர்”! ஒரு நிமிடம் பதறிய “சிஎஸ்கே”!

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் திருவிழா என்றால் அதனை ஐபிஎல் தொடர் என்றே கூறலாம். அந்தப்படி ஐபிஎல் போட்டியானது ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும். அவை இந்த ஆண்டும் கோடை காலத்தில் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக சில மாதங்கள் தடை செய்யப்பட்டு தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது.ஐபிஎல்

மேலும் இந்த ஐபிஎல்லில் தற்போது பலம் வாய்ந்த அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி காணப்படுகிறது. மேலும் இன்றைய தினம் ஒரே நேரத்தில் இரு போட்டிகள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக ப்ளே ஆஃப் உள்நுழைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது

.டெல்லி கேப்பிடல்ஸ்

மேலும் முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பில் 164 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்னர் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலேயே கோலி மற்றும் படிக்கல் விக்கெட்டுகளை இழந்தது.

அதன் பின்னர் நிதானமாக ஆடிய ஏபி டிவிலியர்ஸ் மற்றும் பரத் ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேக்ஸ்வெல்  மற்றும் பரத்தின் கூட்டணியில் ஆர்சிபி அணி தற்போது வெற்றியை அடைந்துள்ளது .

மேக்ஸ்வெல்-பரத்அதுவும் குறிப்பாக கடைசி பாலில் பரத் அடித்த சிக்சரால் ஆர்சிபி அணி தனது 3வது இடத்தை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த போட்டியின் முடிவில் ஆர்சிபி அணி இரண்டாம் இடத்திற்கு சென்று விடும் என்று ஆர்சிபி  ரசிகர்கள் மத்தியில் ஆசை காணப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ்மேலும் தற்போது இரண்டாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த இக்கட்டான சூழல் இருக்கும் என்று நினைத்த நிலையில் போட்டியின் முடிவில் நெட் ரன் ரேட்களின் அடிப்படையில் ஆர்சிபி அணி தனது மூன்றாவது இடத்தினை உறுதி செய்துள்ளது.

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.