யாரும் அறியாத செம்பருத்தி பூவின் வியக்க வைக்கும் நன்மைகள்…!

பூக்கள் என்றதும் பலருக்கு நினைவு வருவது அழகும் அலங்காரமும் தான். ஆனால் பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய பொருட்களாகும். குறிப்பாக செம்பருத்தி பூ பார்ப்பதற்கு அழகாக கண்களை கவரும் வகையில் பல வண்ணங்களில், வகைகளில் கிடைக்கும் பூ. ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு செம்பருத்தி என பல வகைகளில் செம்பருத்தி பூக்கள் உள்ளன.

flower 5033418 1280

கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் வீடுகளில் எளிதாக வளர்க்கக்கூடிய ஒரு செடியாக செம்பருத்திப் பூ செடி உள்ளது. இந்த செம்பருத்தி பூ பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த செம்பருத்திப் பூவினை டீ போல தயாரித்து பருகினால் பல நன்மைகளை பெறலாம். இந்த டீயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

செம்பருத்தி பூ டீ மருத்துவ பயன்கள்:

cup of tea 5074351 1280

1. செம்பருத்தி பூ ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது. உடலின் செல்களை பாதிப்படைவதை தடுத்து சருமத்தை பொலிவு பெற செய்யக்கூடியது. செம்பருத்தி பூவினை டீ செய்து பருக செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முழுமையாக பெற முடியும்.

2. உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்திட செம்பருத்தி டீ மிகவும் உகந்தது. ஒரு ஆய்வின் படி 30 நாட்கள் தொடர்ந்து செம்பருத்தி டீ பருகிய ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் சரியானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. கல்லீரலை பாதுகாப்பதில் செம்பருத்தி பூ டீ உதவுகிறது. நம் உடலில் கல்லீரல் மிக முக்கியமான பணிகளை செய்கிறது. இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க செம்பருத்தி டீ தொடர்ந்து பருக பரிந்துரைக்கப்படுகிறது.

flower 1900333 1280

4. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு செம்பருத்தி டீ சிறந்த தேர்வு. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்திட உதவும்.

5. புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் செம்பருத்தி பூவிற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், தோல் புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டது.

6. சாதாரண வழக்கமான தேன் இருக்கு மாற்றாக ஏதேனும் பருக வேண்டும் என்று விரும்பினால் இந்த செம்பருத்தி டீயினை முயற்சி செய்து பார்க்கலாம் இது உடலுக்கு புத்துணர்ச்சியோடு ஆரோக்கியத்தையும் சேர்த்து தரக்கூடியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews