அட… தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் நமக்கு இத்தனை நன்மைகளா?

சூரிய நமஸ்காரம் யோகாசன நிலைகளில் ஒரு முக்கியமான ஆசனம் ஆகும். 12 நிலைகளை உடைய ஆசனமாக சூரிய நமஸ்காரம் உள்ளது. சூரிய வழிபாட்டை உணர்த்தும் ஆசனமாக இந்த சூரிய நமஸ்காரம் விளங்குகிறது.

சூரிய நமஸ்காரம்

இந்த சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்பவர்களின் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகளை தரக்கூடியது. என்னென்ன நன்மைகள் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:

1. உடல் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் ஆசனமாக விளங்குகிறது.

2. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

3. உடல் எடையை குறைத்திட சூரிய நமஸ்காரம் உதவுகிறது.

4. செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது.

5. இடுப்பு, தோள்பட்டை, கழுத்து, கை கால் முட்டி போன்றவற்றில் உண்டாகும் வலிகளை வெகுவாக குறைத்திட உதவுகிறது.

6. தூக்கமின்மையை குறைத்து நன்கு தூங்கச் செய்திட இந்த சூரிய நமஸ்காரம் உதவும்.

7. உடலின் ஆற்றலை அதிகரித்து நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

8. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் காத்திட உதவி புரிகிறது.

9. சூரிய நமஸ்காரத்தை செய்யும் பொழுது மன அமைதி ஏற்படுவதால் முகமும் பொலிவுடன் காட்சி தரும்.

10. கூந்தல் உதிரும் பிரச்சனை சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு குறைகிறது.

யோகாவை பற்றி பலரும் அறிந்திடாத 15 சுவாரஸ்யமான தகவல்கள்… சர்வதேச யோகா தினம்.. ஜூன் 21!

சூரிய நமஸ்காரத்தால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

சூரிய நமஸ்காரம் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்றாலும் பெண்களுக்கென்று உள்ள சில பிரச்சனைகளுக்கு சூரிய நமஸ்காரம் சிறந்த தீர்வாக விளங்குகிறது.

சூரிய நமஸ்காரத்தின் நிலைகள் பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பைகளை குறைத்திட உதவி புரிகிறது.

தைராய்டு சுரப்பி சரியான அளவில் சுரந்திட வழிவகை செய்கிறது.

ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்து மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் கோளாறுகளையும் நீக்கிட வழிவகை செய்கிறது.

தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு பிரசவத்தின் போது எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்வதால் பல நன்மைகள் உண்டு என்றாலும் ஆசனம் செய்திட வேண்டும் என்று அவசரமாய் நாமும் சூரிய நமஸ்காரம் செய்தோம் என்று செய்யாமல் முறைப்படி அதன் ஒவ்வொரு நிலைகளையும் நிதானமாக பின்பற்றினால் நல்ல பலன்களை அனைவரும் பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews