வாழைத் தண்டின் நன்மைகள் தெரிந்தால் அசந்துபோவீங்க!!

953f6ab6f9f327c5d273f899265a6c47

வாழைத் தண்டு ரூ.10 என்ற அளவிலேயே சந்தைகளில் கிடைக்கின்றது. இதனைப் பலரும் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் இதன் நன்மைகள் தெரிந்தால் நீங்கள் கட்டாயம் இதனை வாங்காமல் இருக்கமாட்டீர்கள்.

வாழைத் தண்டு சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்வதோடு மட்டுமல்லாது, சிறுநீரகக் கற்களை கரைக்கச் செய்கின்றது. சிறுநீரகத்தில் கல் இருந்தால் இதனை ஜூஸாகக் குடிக்க வேண்டும் என மருத்துவர்களே அறிவுறுத்துவர்.
 
உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் காலையில் வெறும் வயிற்றில் வாழைத் தண்டு ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

டயட் இருப்பவர்கள் டயட் உணவில் வாழைத் தண்டு பொரியலைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாய்ப்புண், தொண்டைப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் வாழைத்தண்டு ஜூசைக் குடித்து வந்தால் விரைவில் நலம்பெறலாம். மேலும் நீரிழிவு நோயாளிகள் வாழைத் தண்டினை பொரியலாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வந்தால் சர்க்கரை அளவு இரத்தத்தில் குறையும்.
 
மேலும் நாவறட்சி அதிகமாக இருந்தாலோ, உடல் சூடு அதிகமாக இருந்தாலோ கட்டாயம் வாழைத் தண்டு ஜூஸ் குடித்தல் வேண்டும்.

மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய்ப் பிரச்சினைகள், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளுக்கு வாழைத் தண்டு பெரும் தீர்வாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews