பொழுதுபோக்கு

சுவலட்சுமிக்கு ஸ்கெட்ச் போட்டாரா கார்த்திக்?.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்.. என்ன ஆச்சு?

பிரபல நடிகர் நடிகைகளின் வெளிவராத பல ரகசியங்களை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் தற்போது 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சுவலட்சுமி பற்றியும் சில விஷயங்களை ஓபனாக பேசியுள்ளார்.

சுவலட்சுமி பற்றி பயில்வான் பேச்சு:

கொல்கத்தாவை சேர்ந்த சுவலட்சுமி முதன் முதலில் உட்டோரன் எனும் வங்காள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து 1995ம் ஆண்டு அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது சுவடை பதித்தார் சுவலட்சுமி. முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. விஜய், அஜித், கார்த்திக், முரளி, சரத்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும், காத்திருந்த காதல், லவ் டுடே, காதல் பள்ளி, நீ வருவாய் என உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்தார். நடிகை சுவலட்சுமி 2001ம் ஆண்டு விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த சுவலட்சுமி சுவட்சர்லாந்து, சான்பிரான்சிஸ்கோ போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்துள்ளார்.

சினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளிப்படையாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது நடிகை சுவலட்சுமி பற்றியும் பேசிய வீடியோவை பகிந்துள்ளார், அதில் தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வராதாதற்கு காரணம் சினிமாவிற்கு வந்தால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பது தான். அதனால் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி நடிகைகள் தமிழில் போதும் என்ற அளவிற்கு கவர்ச்சியாக நடித்து வருகின்றனர். 2000ம் ஆண்டுகளில் நடிகைகளே ஐட்டம் சாங், குத்துபாடல் என ஆடத்தொடங்கினர் அதற்காக அதிகமான பணமும் வாங்கினார்கள்.

கவர்ச்சியாக நடித்தால் தான் பிரபல நடிகையாக முடியும் என்ற எண்ணத்தை மாற்றி அமைத்த நடிகைகளுள் சுவலட்சுமியும் ஒருவர் ஆவார். அவர் நடித்த 13 படங்களிலும் அவர் சேலையுடன் தான் நடித்துள்ளார். பலரும் கவர்ச்சியாக நடித்தால் வாய்ப்புகளும் சம்பளமும் அதிகரிக்கும் என அறிவுறுத்தியும் அவர் அதை மறுத்து விட்டார். அவர் கவர்ச்சியாக நடிக்காமலேயே அவர் நடித்த படங்களில் பல படங்கள் வசூலை அள்ளியுள்ளது. சுவலட்சுமிக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் நடிக்கவிருந்த வாய்ப்பு கிடைத்த போதும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சில வாய்ப்புகளை தவிர்த்தார்.

நடிகை சுவலட்சுமியின் அழகில் ரசிகர்கள் மட்டுமல்ல பல நடிகர்களும் விழுந்துவிட்டனர். கோகுலத்தில் சீதை படத்தில் நடிகர் கார்த்திக்குடன் நடித்துக்கொண்டிருந்த போது கார்த்திக்கும் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசியதாகவும் ஆனால் அதையும் சுவலட்சுமி தவிர்த்து தான் எடுத்த முடிவில் உறுதியுடன் இருந்து நடித்ததாக சுவலட்சுமியை புகழ்ந்து தள்ளியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Published by
Sarath

Recent Posts