உலகம்

50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான பார்கோட்.. எந்த நாட்டில் தெரியுமா?

தற்போது கிட்டத்தட்ட அனைத்து பொருள்களிலும் பார்கோட் அச்சடிக்கப்பட்டிருக்கும் என்பதும் அந்த பார்கோட்டை   ஸ்கேன் செய்துதான் அந்த பொருளின் விலை பில்லில் பதிவு செய்யப்படும் என்பதும் தெரிந்தது.

5 ரூபாய் சாக்லேட் முதல் 50,000 ரூபாய் பொருள்கள் வரை அனைத்து பொருட்களிலும் தற்போது பார்கோடு அச்சடிக்கப்பட்டிருப்பதால் பில் போடுபவருக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பார்கோடில் விலை தவிர வேறு சில முக்கிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதும் இந்த பார்கோடு என்பது டெக்னாலஜியின் புதிய அம்சமாக கருதப்படுகிறது.

அனைத்து சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்களில் பார்கோடு கண்டிப்பாக இருக்கும் என்பதும் பார்கோட் பயன்படுத்துவது என்பதை தற்போது சர்வ சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதே ஜூன் 26 ஆம் தேதி 50 ஆண்டுகளுக்கு முன் பார்கோட் அறிமுகம் செய்யப்பட்டது என்பது யாருக்காவது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த சுவிங்கம் கம்பெனி தான் 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி தங்களுடைய தயாரிப்பில் பார்கோடை முதன் முதலில் அறிமுகம் செய்தது.  Universal Product Code என்று கூறப்படும் இந்த பார்கோட் முதன்முதலாக அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அமெரிக்கர்களே அதை ஆச்சரியமாக பார்த்தார்கள் என்பதும் ஒரு பார்கோட்டில் எப்படி இவ்வளவு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொறியாளர் ஜார்ஜ் லாரர் என்பவர் தான் இந்த பார்கோட்டை முதன்முதலாக வடிவமைத்தார் என்பதும் அதன் பிறகு அவர் குரோசரி கடைகளுக்கு சென்று அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த நிலையில் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் என்று பார்கோட் அறிமுகம் செய்யப்பட்ட தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாமும் அதை நினைவு கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

Published by
Bala S

Recent Posts