ஹீரோவா போராடியாச்சு ஒன்றும் வேலைக்கு ஆகல.. இனிமே இந்த ரூட்டு தான்!.. பரத்தின் திடீர் முடிவு!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து காதல், வெயில், எம்டன் மகன் போன்ற வெற்றி படங்களில் நடத்துள்ளார். ஒரு படத்திற்காக தனது நூறு சதவீதத்தை தரும் நடிகர்களுள் பரத்தும் ஒருவர்.

எல்லா நடிகர்களுக்கும் ஏற்படுவது போல பரத்திற்கும் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போராடினார். வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் நடித்தும் பேர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை. ஹீரோவாக போராடி வந்த பரத் தற்போது வில்லனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே செல்லமே, கடுகு, ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் நடிகர் பரத். தற்போது இயக்குநர் முத்தையா இயக்கும் புதிய படத்தில், முத்தையாவின் மகன் மற்றும் புது முகங்களுடன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

muthai

வில்லனாக மாறும் பரத்:

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் முத்தையா. இவரின் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. மேலும், அவரது எல்லா படங்களிலும் கிராமத்து மணம் இருக்கும். இறுதியாக அவர் இயக்கி வெளியான விருமன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படம் சொதப்பியது. முத்தையா படம் என்றாலே ஹீரோக்களுக்கு முக்கியமான ரோலாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முத்தையா தனது படத்தில் வில்லனாக நடிக்க முன்னரே பரத்தை கேட்டதாகவும். பரத் அதனை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது தனது மகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படத்தில் பரத்தை வில்லனாக நடிக்கவைக்கவுள்ளார். பரத்தை கிராமத்து வில்லனாக பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். நல்ல கதையைக் கொண்டு அதனை சிறப்பாக இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் முத்தையா. முத்தையாவின் இந்த படம் பரத்திற்கு ஒரு திருப்புமுனையாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹீரோவா செட்டாகல:

கடைசியாக வாணி போஜன் உடன் இணைந்து பரத் நடித்த லவ்வர் படம் எல்லாம் ஃப்ளாப் ஆன நிலையில், இனிமேல் ஹீரோ செட்டாகாது என நினைத்து வில்லனாக முடிவெடுத்து விட்டாரா என சினிமா வட்டாரத்திலேயே பல பேச்சுகளும் கிளம்பி உள்ளன. ஆனால், சினிமாவில் சர்வைவ் பண்ண அதையெல்லாம் பொருட்படுத்தினால் வேலைக்கு ஆகாது என தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார் பரத்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.