விஜய்யை நேரடியா அட்டாக் பண்ணனும்னே அஜித் படத்தில் வைரமுத்து எழுதிய பாட்டு.. இவ்ளோ எல்லாம் நடந்துச்சா..

தமிழ் சினிமாவில் எந்த காலத்தை எடுத்துக் கொண்டாலும் இரண்டு நடிகர்கள் இடையேயான போட்டி ஆரோக்கியமாகவோ அல்லது சற்று எதிர்மறையாகவோ இருந்து கொண்டே தான் இருக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் நல்ல நட்புடன் இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள், இரண்டு பேரின் படங்கள் வரும் போது போட்டி போட்டுக் கொண்டு கருத்துக்களை பரிமாறி வருவார்கள்.

சமூக வலைத்தளங்கள் ஆரோக்கியமாக இல்லாத காலம் தொடங்கி இன்று பரவலாக அனைவரிடமே இணைய வசதி இருக்கும் காலம் வரையிலும் இந்த போட்டிகள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் வருகிறது. இதில் மிக முக்கியமான இரு நடிகர்களின் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்ட காலம் என்றால் நிச்சயமாக அஜித்குமார் – விஜய்யின் காலகட்டத்தை சொல்லலாம்.

இந்த இரண்டு பேரும் மிகப்பெரிய நடிகர்களான நாள் முதலே அவரது ரசிகர்கள் மாறி மாறி படங்களோ, பாடல்களோ, டீசர்களோ வெளிவரும்போது எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் நடிகர் விஜய் நிறைய படங்கள் நடித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் நடித்து முடித்து விட்டு அரசியலில் முழுதாக ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். மறுபுறம் அஜித் அதிக நேரம் எடுத்துக் கொண்டுதான் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி ஒரு சூழலில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே மாறி மாறி இவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது படத்தில் வரும் பாடலில் நேரடியாக விஜய்யை தாக்கிய சம்பவம் குறித்து அந்த படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜே தற்போது தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ஒரு நேர்காணலில் பேசிய பரத்வாஜ், “அஜித்தின் அட்டகாசம் படத்தில் வரும் உனக்கென பாடலில் விஜய் அப்பா வழியாக சினிமாவில் வந்ததை மறைமுகமாக வைரமுத்து தாக்கி இருப்பார். அது தற்செயலாக அமைக்கப்பட்ட வரிகள் கிடையாது. வேண்டுமென்ற போட்டிக்காக எழுதிய வரிகள் தான். இந்த காலத்தில் அந்த பாடல் ஒரு வேளை வெளியாகி இருந்தால் எங்களை எல்லாம் கிழித்திருப்பார்கள். விஜய்யை நேரடியாக அட்டாக் செய்த பாடல் தான் அது” என பரத்வாஜ் கூறி உள்ளார்.

இந்த பாடல் பற்றி ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை இந்த நாள் வரை கூறி வந்த நிலையில், தற்போது அந்த பாடலின் இசையமைப்பாளரே உண்மையை சொல்லி உள்ளது இரண்டு பேரின் ரசிகர்களும் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews