வந்துடுச்சு பாலா பட அறிவிப்பு!.. அருண் விஜய்யின் வணங்கான் டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், பாலா இயக்கத்தில் அந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதமே வணங்கான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் வெளியாகவில்லை.

வணங்கான் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு:

கடைசி நேரத்தில் சில பல போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமான நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்த மிஷின் சேப்டர் ஒன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களை விட அருண் விஜய் படம் நல்லா இருக்கிறது என விமர்சனங்கள் வெளியாகின. ஆனால் அந்த படத்துக்கு போதிய திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட திரையரங்குகளிலும் பெரிதாக கூட்டம் வராத நிலையில், குறைவான வசூலையே அந்த படம் ஈட்டியது.

பாண்டவர் பூமி படத்திலிருந்து அருண் விஜய் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு இன்னமும் சோலோவாக எந்த ஒரு படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. காதல், ஆக்சன், வித்தியாசமான கதைகள் என அவரும் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே வருகிறார். இந்நிலையில் அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் நடிகராக அருண் விஜய்க்கு மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பேக் கொடுப்பாரா பாலா?

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் பாலா இந்தப் படத்தில் கண்டிப்பாக கம்பேர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணி விட்டோமே எனக்கு இன்னும் அளவுக்கு பாலா இயக்குகிறாரா அல்லது நல்லவேளை தப்பித்து விட்டோம் என நினைக்கும் அளவுக்கு படம் இருக்குமா? என்பது ரிலீஸ் ஆனால் தான் தெரியும்.

வணங்கான் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. பாலா படத்தின் அறிவிப்பு வெளியானதுமே சிவகார்த்திகேயனின் அமரன் டைட்டில் அறிவிப்பு டிரெண்டிங் எல்லாம் கீழே இறங்கி விட்டது.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாலாவுக்கான ஒரு இடம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். வணங்கான் டீசர் வரும் 19ம் தேதி வரவுள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...