கேமிங் லேப்டாப் வாங்க போறீங்களா? இதோ ஒரு அட்டகாசமான மாடல்..!

கடந்த சில ஆண்டுகளாக கேமிங் லேப்டாப்கள் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிலையில் முன்னணி நிறுவனங்கள் கேமிங்கிற்காகவே பிரத்யேகமாக லேப்டாப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ASUS நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கேமிங் லேப்டாப் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

ASUS TUF A15 HN075WS என்ற புதிய கேமிங் லேப்டாப் AMD Ryzen 7 4800H பிராசசர் மற்றும் NVIDIA GeForce RTX 3050 கிராபிக்ஸ் கார்டு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 15.6-இன்ச் FHD (1920 x 1080) IPS டிஸ்ப்ளே மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ள இந்த லேப்டாப் 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் விண்டோஸ் 11 ஹோம் கொண்டது ஆகும்.

ASUS TUF A15 HN075WS இந்தியாவில் தற்போது ரூ,.71,990. விலையில் விற்பனையாகி வருகிறது. மேலும் வங்கிச்சலுகைகள், கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் சில சலுகைகளும் உண்டு.

ASUS TUF A15 HN075WS லேப்டாப்பின் சிறப்பம்சஙக்ளை சுருக்கமாக பார்ப்போம்.

* AMD Ryzen 7 4800H பிராசசர்
* என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 கிராபிக்ஸ்
* 15.6-இன்ச் FHD (1920 x 1080) IPS டிஸ்ப்ளே
* 16ஜிபி DDR4-3200 ரேம்
* 512GB PCIe SSD சேமிப்பு
* ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்

ASUS TUF A15 HN075WS ஒரு சக்திவாய்ந்த மற்றும் மீடியம் பட்ஜெட்டில் தேடுபவர்களுக்கு ஒரு நல்ல கேமிங் லேப்டாப் ஆகும். உயர் சிறப்பு அமைப்புகளுடன் 1080p தெளிவுத்திறனில் பெரும்பாலான கேம்களை இயக்க முடியும். மேலும் இந்த லேப்டாப் நீண்ட பேட்டரி ஆயுளையும் கொண்டுள்ளது.

ASUS TUF A15 HN075WS இன் சில நிறை , குறைகள்

நிறைகள்

* சக்திவாய்ந்த செயல்திறன்
* மலிவு விலை
* நல்ல உருவாக்க தரம்
* நீண்ட பேட்டரி ஆயுள்

குறைகள்

* காட்சி பிரகாசமாக இல்லை
* ஸ்பீக்கரில் சவுண்ட் குறைவாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews