அருண் விஜய் நடித்த ‘மிஷன் சாப்டர்- 1’ ஓடிடியில் ரிலீஸ்… எப்போ தெரியுமா…

இயக்குனர் ஏ. எல். விஜய் 2007 ஆம் ஆண்டு அஜித் மற்றும் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முன்னதாக இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கி 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை பெற்றவர். 2010 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடித்த ‘மதராசபட்டினம் ‘ என்ற படத்தை இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் மூலம் பிரபல இயக்குனர் ஆனார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொங்கலை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படம் ‘மிஷன் சாப்டர்-1’. ஆக்சன் மற்றும் எமோஷனல் ஜேனரில் உருவான இப்படத்தில் நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் தந்தை மகள் இடையேயான சென்டிமென்டை காட்டுவதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.

நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களுக்கு மத்தியில் ரிலீஸான மிஷன் சாப்டர்-1 திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில் வெளியாகவில்லை.

ஓடிடியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இதைப் பற்றி நடிகர் அருண் விஜய்யிடம் X தளத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த நடிகர் அருண் விஜய், மிஷன் சாப்டர்-1 ஓடிடி ரிலீஸைப் பற்றி லைக்கா நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மிஷன் சாப்டர்-1 திரைப்படத்தை சிம்ப்ளி சவுத் என்கிற ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் வருகிற மார்ச் 15 ஆம் தேதிக்குள் ஓடிடியில் ரிலீஸாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...