பொழுதுபோக்கு

பும்ராவால ஒரு ஃபாஸ்ட் பவுலரா முடியாத விஷயம்.. டி 20ல் அர்ஷ்தீப் படைத்த மாபெரும் சாதனை..

நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ள நிலையில், இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது அவர்களின் பந்து வீச்சு யூனிட் தான். இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்க மைதானங்களில் வைத்து தான் நடைபெற்றிருந்தது. இந்த மைதானங்கள் பல அணிகளுக்கும் புதிதான விஷயமாக இருக்க, பேட்டிங் என்பதே தடுமாற்றமாக அனைத்து வீரர்களுக்கும் அமைந்திருந்தது.

பெரும்பாலான பிட்ச்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க, 100 ரன்கள் அடித்தாலே அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு தான் அதிகம் இருந்தது. இந்திய அணி கூட, பாகிஸ்தானுக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற்றிருந்தது. இதே போல, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட அணிகளையும் குறைந்த ரன்னில் சுருட்டியதால் தான் அவர்களால் சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேற முடிந்திருந்தது.

மேலும் பேட்டிங்கில் கோலி, ரோஹித், ஜடேஜா, ஷிவம் துபே உள்ளிட்ட பலரும் கூட லீக் போட்டிகளில் சொதப்பி இருந்தனர். ஆனால் பும்ரா, அர்ஷ்தீப் சிங் என பந்து வீச்சாளர்கள் ஒரு குறை கூட இல்லாமல் அசத்தலாக பந்து வீசி தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்திருந்தனர்.

சூப்பர் 8 சுற்றில் தான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடத் தொடங்க, பந்து வீச்சிலும் அவர்கள் தொடர்ந்து கலக்குவதை நிறுத்தவில்லை. லீக் சுற்றின் முதல் 2 போட்டிகளில் பும்ரா ஆட்ட நாயகன் விருதினை வெல்ல, அர்ஷ்தீப் சிங்கும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். இதனால், நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறந்து விளங்க அவர்களின் பந்து வீச்சாளர்களின் உழைப்பு தான் அதிகமாகவும் இருந்தது.

பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விக்கெட்டுகளையும் எடுக்க இந்திய அணியின் கை தான் அதிகம் ஓங்கி இருந்தது. சமீபத்தில் நடந்த அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடிக் கொடுக்க, இந்திய அணி இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. இதனிடையே, இந்திய அணியின் ஆபத்தான பவுலராக அறியப்படும் பும்ராவால் முடியாத விஷயத்தை அர்ஷ்தீப் சிங் செய்து முடித்து பற்றி தற்போது பார்க்கலாம்.

டி 20 சர்வதேச போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வந்தார். அப்படி ஒரு சூழலில், அதனை முந்திய அர்ஷ்தீப் சிங், 50 இன்னிங்ஸ்களில் 77 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

முதல் ஐந்து இடங்களில் பும்ரா உள்ளிட்ட எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லாத சூழலில், குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட் எடுத்து முதலிடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளார் அர்ஷ்தீப் சிங்.

Published by
Ajith V

Recent Posts