தளபதி 68 டைட்டில் அது கிடையாது!.. அழுத்தம் திருத்தமாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கஸ்டடி படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ஒரு தலைப்பு வைரலாகி வருகிறது.

பாஸ் என்கிற அந்த ஒரு தலைப்பு மட்டும் இல்லை Puzzle என்கிற இன்னொரு தலைப்பும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான விளக்கத்தை, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

தளபதி 68 டைட்டில்:

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. அந்த படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இயக்குனர் அட்லி அதிகமாக படத்தின் பட்ஜெட்டை உயர்த்திவிட்டார் என்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபமே இல்லை என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகளும் வெடித்தன.

மேலும், பிகில் படத்திற்கு பிறகு வேறு எந்த பெரிய நடிகர் படத்தையும் அதிக பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க நிலையில் அதுவும் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தளபதி விஜய்யின் 68-வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்:

இந்த படத்திற்காக ஆரம்பத்திலேயே லாஸ் விகாஸ் சென்ற நடிகர் விஜய் அங்கே இந்தியன் 2-க்கு டீ ஏஜிங் வொர்க் செய்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அங்கே எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

மேலும், இதுவரை நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்காத பல முன்னணி நடிகர்களை இந்த படத்தில் வெங்கட் பிரபு களம் இறக்கி உள்ளார். நடிகர் பிரசாந்த் மீண்டும் அந்தகன் படத்தின் மூலமாக கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக தளபதி 68 படம் மூலமாக அவர் கம்பேக் கொடுத்து விடுவார் என்றே தெரிகிறது. மேலும், வெள்ளி விழா நாயகன் மோகன், பிரபுதேவா, நடிகைகள் சினேகா, லைலா மற்றும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தளபதி 68 படத்திற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சில நெட்டிசன்கள் கொளுத்திப் போட்ட நிலையில், சிலர் Puzzle தான் டைட்டில் என்றும் உருட்ட ஆரம்பித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, அந்த இரு டைட்டில்களும் இல்லை என்றும் அதை விட ஃபயரான ஒரு டைட்டில் தான் வெங்கட் பிரபு வைக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

Screenshot 2023 12 20 153553

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.