அனுமனுக்கு வெண்ணெய் காப்பு பூசுவதின் ரகசியம்..


efb08e70dcf50233a9b04db909d4a99f

அனுமன் சிலைக்கு வெண்ணெயினால் அலங்காரம் செய்வதை பார்த்திருப்போம். நேர்த்திக்கடனாய் செய்துமிருப்போம். அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாமா?!

eeb3076ebb4f85aa9bee189e45289088-1

ராமனுக்கும், ராவணனுக்குமிடையில் நடந்த கடுமையான போரின்போது, ஒருசமயம் மயங்கி விழுந்த ராமர், லட்சுமணனை தன் தோளில் சுமந்து போர்க்களத்தைவிட்டு வெளியில் வந்து, ராம-லட்சுமணனுக்காக இமயமலைக்கு சென்று அங்கிருந்த சஞ்சீவி மலையை கொண்டு வந்தார்.  ராம-லட்சுமணர் கண்விழித்தனர். எல்லோரும் மகிழ்ந்திருந்தனர். அதுவரை, தன் உடலில்  ராவணன் விட்ட அம்பு மழையால், அனுமனின் உடலில் காயங்கள் ஏற்பட்டதை உணராதிருந்த அனுமன்,  காயத்தின் எரிச்சல் தாளாமல் அனுமன் துவண்டான். அனுமனி உடல் எரிச்சல் நீங்க, ராமர் வெண்ணெய் பூசினாராம். அதனால்தான், நாம் நினைச்ச காரியம் நடக்க, அனுமனுக்கு ஐஸ் வைக்க வெண்ணெய் காப்பு செய்து வழிப்படுகிறோம்.

சரி, அனுமன்கோவிலில் பிரசாதமாய் செந்தூரமும், செந்தூரத்தை வெண்ணெயில் குழைச்சும் தருவதும் ஏன்னும் தெரிஞ்சுக்கலாம்..

அடர்ந்த கானகத்திலும், ஆடை, அலங்காரத்தையும் கைவிட்டிருந்த நிலையிலும் சீதை செந்தூரப்பொட்டு வைக்கும் வழக்கத்தை விடவில்லை. இதைக்கண்ட, அனுமன் சீதையிடம், தாயே! தாங்கள் நெற்றியில் சிவப்பாய் ஏதோ வைத்திருப்பதன் காரணம் என்னவென்று கேட்க, தன் கணவனான, ஸ்ரீராமர் நூறாண்டு காலம் வாழவே செந்தூரப்பொட்டு வைப்பதை வழக்கமா வைத்திருப்பதாக சீதை சொன்னாள்.

உடனே, அங்கிருந்த செந்தூரத்தை தன் உடல் முழுக்க பூசிக்கொண்டார். சீதை காரணம் கேட்க, இத்தூனூண்டு பொட்டு வச்சா, நூறாண்டு ராமர் நலமோடு  இருப்பாரென்றால், நான் உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டா எத்தனை நூறாண்டுகள் ராமர் நலமாய் இருப்பார்?! வானம் பூமி இருக்கும் காலம்வரை ராமர் நலனில் பழுது வராதில்லையா என பதிலுரைத்து சீதையை வாயடைக்க செய்தாராம். அத்தனை உயர்ந்த பக்தி, அன்பு அனுமனுடையது…

 

வெண்ணெய் தடவிய சிலாரூபத்தில் செந்தூரம் அப்பிய பழக்கம், இரண்டையும் குழைச்சு சிலாரூபத்தில் அலங்காரம் செய்யும் வழக்கமும், அதை பக்தர்களுக்கு பிரசாதமாய் கொடுக்கும் பழக்கமும் உண்டானது!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews