அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வாபஸ்!!!

அண்ணா பல்கலைக்கழகம் தனது 11 உறுப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடுவதாக அறிவித்து இருந்தது.

2010 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு தமிழ் வழியிலும் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய சில உறுப்புக் கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் சிலவற்றை தமிழ் வழியில் பயிற்றுவித்து வந்தது.

இந்தப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டாததால் குறைந்த அளவிலான சேர்க்கையே இருந்து வந்துள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழகம் ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய 11 உறுப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்ட வந்த தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளையும் சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த ஆங்கில வழி பாடப்பிரிவுகளையும் மூடுவதாக அறிவுத்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். எந்த பாடப்பிரிவும் மூடப்படாது என்றும் அறிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews