கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல்.. வெளியிட்டது NIRF.. எந்த கல்லூரி முதலிடம்??

மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு ( NIRF ) 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை மும்பை ஐஐடியும் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், இரண்டாவது இடத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியாவும் தேர்வாகி உள்ளது. தமிழகத்தில் இந்த தரவரிசை பட்டியலில் கோவை அம்ரிதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஏழாவது இடத்தையும் , வேலூர் விஐடி எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், இரண்டாவது இடத்தை சண்டிகர் பிக்மர் மருத்துவக் கல்லூரியும், மூன்றாவது இடத்தை தமிழகத்தின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் பெற்றுள்ளது.

கலைக் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை டெல்லியில் மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாவது இடத்தை இந்து கல்லூரி மற்றும் சென்னை பிரசிடென்சி கல்லூரியும் மூன்றாவது இடத்தை கோவை பிஎஸ்ஜிஆர் கல்லூரியும் பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி தொடர்ந்து 5 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்று வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews