அனிமல் படத்துக்கு 6 விருது!.. சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த படத்தில் இன்னும் எக்ஸ்ட்ரீமுக்கு போவார்!..

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திலேயே சந்தீப் ரெட்டி வங்கா தனது சுய ரூபத்தை காட்டியிருப்பார். பேண்டுக்குள் ஐஸ் கட்டிகளை போடுவது, பெண்களுடன் உறவு கொள்வது, காதலியுடன் திருமணம் ஆவதற்கு முன்பாக பலமுறை உறவு கொள்வது என எல்லை மீறிய கதையாக தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் அந்தப் படத்தை உருவாக்கி இருப்பார். ஆனால் அந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினர். அதன் விளைவாக அதைவிட மோசமாக தன்னால் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என நினைத்து அனிமல் படத்தை இயக்கியிருக்கிறார் அந்த இயக்குனர்.

தியேட்டரில் வெளியான அனிமல் படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி 900 கோடி ரூபாய் வசூலை பெற வைத்தனர். ஆனால், ஆந்திராவை தவிர்த்து தென்னிந்திய மாநிலங்களில் அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில், ஓடிடி தளத்தில் வெளியான அனிமல் படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இந்த படத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சந்தீப் ரெட்டி வங்காவின் வன்மக் குமுறல்:

சமீபத்தில் ஒரு படத்தை பார்த்துவிட்டு வாந்தி வருவது போல் உள்ளது என்ன நடிகர் ராதிகா சரத்குமார் மறைமுகமாக ஹனிமூன் படத்தை தாக்கி பேசினார். மனிதர்களுக்காக எடுக்கப்பட்ட பழம்தான் அனிமல் அந்தப் படத்தை இயக்கியவர் ஒரு அனிமல் என சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட படக்குழுவினரை ஸ்ரீநினிவாஸ் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் அந்த படத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஃபிலிம் ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது. மேலும், அதிகபட்சமாக ஆறு விருதுகள் அந்த படத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு விருது கொடுக்கவில்லை. படம் என்றும் அனிமல் தேர்வாகவில்லை. ரன்பீர் கபூர் நடிப்பை தவிர்த்து படத்தின் பொருள் மற்றும் சொல்ல வந்த கரு எல்லாமே வன்மத்தை கற்கும் விதமாகவே உள்ளது என பாலிவுட் விமர்சகர்கள் முதல் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அதேசமயம் இதுபோன்ற படங்களைத்தான் சமீபகாலமாக ரசிகர்கள் விரும்பி பார்ப்பதால், இயக்குனர்களும் என்ற படங்களை ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை என எடுக்கத் துணிந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews