மீனாட்சிக்கு துரோகம் செய்யும் ஆனந்த்… ரியாவைப் பற்றிய உண்மைகளை கூறும் கார்த்திக்… பரபரப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

ஜீ தமிழில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரின் நேற்றைய எபிசோடில் ரியாவும் ஆனந்தும் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வதற்காக ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு செல்கின்றனர். அவர்களை பின்தொடர்ந்து தீபா செல்கிறாள். ஆனந்திடம் கெஞ்சுகிறாள் மீனாட்சி அக்காவை நினைத்து பாருங்கள் என்று. ஆனால் தீபா பேசுவதைக் கேக்காமல் ஆனந்த் நான் கண்டிப்பாக ரியாவை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன் என்று செல்கிறான்.

பின்பு தீபா கார்த்திக்கிற்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி கார்த்தியை ரிஜிஸ்டர் ஆபீஸிக்கு வர சொல்கிறாள். ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர் என்று தீபா சொன்னதும் ரெஜிஸ்டர் ஆபிசர் ஆனந்தையும் ரியாவையும் தீட்டி அனுப்புகிறார் முதலில் முதல் மனைவியிடம் இருந்து டைவர்ஸ் வாங்குங்கள் என்று. ஆனந்த் தீபாவிடம் இங்க வேணுமானால் திருமணம் நடக்காமல் இருக்கலாம் ஆனால் எதாவது ஒரு கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறிவிட்டு கோவிக்குக்கு கிளம்புகின்றனர்.

அதன் பின்பு இன்றைய எபிசோடில் அவர்கள் இருவரையும் தேடி எல்லா கோவிலையும் கார்த்திக் தீபா தேடுகின்றனர். இறுதியாக ஒரு கோவிலை தேடி வருவதற்குள் ஆனந்த்- ரியாவின் திருமணம் முடிந்து விடுகிறது. கார்த்திக்கும் தீபாவும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

பின்னர் கார்த்திக் ஆனந்திடம் ரியாவை நம்பாதே அவள் உன்னை ஏமாற்றுகிறாள் என்று சொல்கிறான். உடனே ஆனந்த் தீபாவும் உன்னை ஏமாற்றித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது தப்பில்லையா என்று கேட்கிறான். கார்த்திக்கும் என்னை நம்பி யாரும் இல்லை ஆனால் உன்னை நம்பி மீனாட்சி அண்ணி இருக்காங்க என்று கூறுகிறான். கார்த்திக்கின் பேச்சைக் கேக்காமல் ஆனந்தும் ரியாவும் செல்கின்றனர்.

பின்பு கார்த்திக்கும் தீபாவும் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு மீனாட்சி திருமண நாளை கொண்டாடுவதற்கு வீட்டில் டெக்கரேஷன், கேக் என்று ரெடி பண்ணி ஆனந்திற்காக காத்திருக்கிறாள். அதைப் பார்த்ததும் கார்த்தியும் தீபாவும் வருத்தப்படுகின்றனர். ஆனந்த் வீட்டிற்கு ரியாவை கூட்டிகொண்டு வருகிறான். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.