சொத்தைப் பிரிக்கச் சொல்லும் ஆனந்த்… மனமுடைந்து காணாமல் போகும் அபிராமி… அம்மாவைத் தேடி தவிக்கும் கார்த்திக்… கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியை தீபா அவுட்ஹவுஸிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு இருக்கும் தீபாவின் அம்மாவிடம் தன் நிலைமையைக் கூறி கதறி அழுகிறாள் மீனாட்சி. தீபாவின் அம்மா அவரைத் தேற்றுகிறார். அபிராமி ஒருபுறம் ஆனந்த் நம் குடும்ப கவுரவத்தை பற்றி நினைக்காமல் இப்படி பண்ணிட்டானே, மீனாட்சியின் அம்மா அப்பாவிற்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று அழுது கொண்டிருக்கிறாள்.

இன்னொரு புறம் ஐஸ்வர்யாவும் அவளது அம்மா ராஜேஸ்வரியும் ஆனந்த் ரியாவை திருமணம் செய்துக் கொண்டு வந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அம்மாவையும் மகனையும் பிரித்து நம் கைக்குள் போட்டுகொண்டு சொத்தை எப்படியாவது பிரிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர். பின்னர் மீனாட்சி போலீஸிடம் புகார் கொடுத்ததால் போலீஸ் ஆனந்தை தேடித் கொண்டு வருகின்றனர். இதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் ஆனந்தை தேடி போலீசார் வீட்டுக்கு வருகின்றனர். ஆனந்திடம் நீங்க தான் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டவரா என்று கேட்கின்றனர். ஆனந்த் ஆமா நான் தான் என்று கூறிக்கொண்டு யார் என்னைப் பற்றி கம்பளைண்ட் கொடுத்தது என கார்த்திக்கிடம் கேட்கிறான். உடனே மீனாட்சி வந்து நான் தான் கம்பளைண்ட் கொடுத்தேன் என்று கூறுகிறாள்.

அபிராமி வேண்டாம் என அழுகிறாள். கார்த்திக் அபிராமியிடம் ஆனந்த் தவறு செய்திருக்கிறான் அவன் ஜெயிலுக்கு போய்ட்டு வரட்டும் என்று கூறி விடுகிறான். போலீஸும் ஆனந்தை அழைத்துச் சென்று விடுகின்றனர்.பின்னர் ராஜேஸ்வரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் ஆனந்தை பெயிலில் எடுக்கச் செல்கிறாள். ஆனந்திடம் என்ன தான் நீங்க தப்பு செய்திருந்தாலும் நீங்களும் எனக்கு மாப்பிள்ளை முறை தான், மனசு கேக்கல அதன் உங்களை பெயிலில் எடுக்க வந்தேன்.

உங்களை நம்பி வந்த ரியாவிற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். ஆனால் நான் தான் பெயிலில் உங்களை வெளியில் எடுத்தேன்னு வீட்ல யாருக்கும் தெரியக் கூடாது என்று சொல்கிறாள். ஆனந்தும் ஒப்புக்கொள்கிறான். பின்னர் கோபத்துடன் வீட்டிற்கு வந்து என்னை ஜெயிலுக்கு அனுப்பின இந்த குடும்பம் எனக்கு தேவை இல்லை உடனே சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க நான் போறேன்னு சொல்கிறான். அபிராமி நொறுங்கி பொய் உட்காருகிறாள். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...