அம்பானி மருமகளுக்காக பிரத்யேகமாக தயாரான ஆடை.. அதில் இருந்த வாசகங்களின் உண்மை தெரிந்து மெய்சிலிர்த்த மக்கள்..

இப்படியும் ஒரு திருமணம் நடக்குமா என நம்மை ஏங்க வைக்கும் அளவுக்கு தான் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆனந்தும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் தான் இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் வைத்து ஆனந்த் – ராதிகா ஆகியோரின் நிச்சயதார்த்தமே பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி இருவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக, திருமணத்திற்கு முன்பான கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏதோ ஒரு பத்து திருமண விழாக்கள் ஒன்றாக கொண்டாடப்பட்டது போலவும் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் வைத்து நடைப்பெற்றிருந்தது. இதில் இந்தியாவின் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் தாண்டி சர்வதேச பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதனால், அம்பானி மகனின் திருமண நிகழ்வில் எந்த பக்கம் பார்த்தாலும் ஒரு பிரபலமாவது அமர்ந்திருக்கும் நிலையில் இனி திருமண விழா எந்த அளவுக்கு பிரமாண்டமாக நடக்கும் என்பதே ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பணத்தை வாரி திருமணம் என்ற பெயரில் செலவு செய்ய வேண்டுமா என விமர்சனம் வந்தாலும், இன்னொரு பக்கம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும் உணவளித்து அசர வைத்திருந்தார் முகேஷ் அம்பானி.

சமீபத்தில் இவர்களின் திருமணத்துக்கு முன்பான நிகழ்ச்சி ஐரோப்பியாவில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த உடை தான் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. அவருக்கென பிரத்தியேகமாக கவுன் உடை ஒன்று தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் நிறைய இடங்களில் வாசகங்களாக இடம் பெற்றிருந்தது.

இதில் வரும் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்ற ஒரு குழப்பம் அனைவரது மத்தியில் உருவாக, 22 வயதில் ஆனந்த் அம்பானி தனது காதலி ராதிகாவுக்கு எழுதிய காதல் கடிதங்களில் ஒன்று தான் அதில் அச்சிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி ராதிகாவின் பிறந்தநாளுக்காக நீண்ட காதல் கடிதம் ஒன்றை ஆனந்த் அம்பானி எழுதிக் கொடுத்ததாகவும் அதில் வரும் வார்த்தைகள் தான் இந்த கவுனில் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த உடை பற்றி பேசி இருந்த ராதிகா, வருங்காலத்தில் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தகள் ஆகியோரிடம் இதை காட்டி பெருமைப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ajith V

Recent Posts