பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படத்தை தயாரித்த நடிகரின் உணர்ச்சி மிகுந்த பதிவு…

விடுதலை பாகம் 1 படத்தில் நடித்திருந்த சூரி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விடுதலை பாகம் 2 எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு  அந்த படம் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது.  விடுதலை படத்திற்கு பிறகு நாயகனாக பல படங்களில் கமிட் ஆகி பிசியாகிவிட்டார் சூரி. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளி  என்ற படத்தில் நடிகர் சூரி நடித்திருந்தார்.  இந்தப் படத்தின் கதாநாயகி  புதுமுகம் அன்னா பென் ஆவார். கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இப்போது இந்த படத்தை  வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றது.

தற்போது  ஜெர்மனியில் நடந்து முடிந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டது.  உலக அரங்கில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும், இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்வை பற்றி நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் உணர்ச்சி பொங்க தனது X  தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால்,  இப்படி ஒரு சர்வதேச அரங்கில், சர்வதேச மேடையில் தனது படத்தை வெளியிடுவதற்கு வாய்ப்பு  கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும்,  அங்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும்  தங்கள் மனதில் நீடித்த முத்திரையை பதித்து விட்டதாகவும்,  அந்த தருணங்களை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டிருந்தார்.

.soori

கொட்டுக்காளி  படத்திற்காக நடிகர் சூரி பல ரிஸ்க்களை எடுத்துள்ளார்.  அதில் ஒன்று,  இந்தப் படத்தில் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு கரகரப்பான குரல் தேவைப்பட்டதாம்.  அதற்காக நடிகர் சூரி மருத்துவரை அணுகி குரலை மாற்றுவதற்காக தன் உடம்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டாராம். அதன் பின்பு சூரி அவர்களின்  தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பாக மாறிவிட்டதாம். அதற்கு பிறகு டப்பிங் செய்து முடித்தாராம்.  கதாநாயகன் குரலுக்காக நடிகர் சூரி செய்த இந்த செயலுக்காக அனைவரும் பாராட்டினர்.  மலையால நடிகை அன்னா பென் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகராக தான் நடிக்கும் படங்களை சிறந்த முறையில் தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு படத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்று உள்ளார். அதற்காக அனைத்து பிரபலங்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.