அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.. சுந்தர் பிச்சையும் இல்லை,  சத்யா நாதெல்லாவோ இல்லை..! யார் இவர்?

கூகுள் நிறுவனத்தின் சிஇவாக இருக்கும் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சத்யா நாதெள்ளா ஆகிய இரண்டு இந்தியரை விட இன்னொரு இந்தியரான நிகேஷ் அரோரா என்பவர் தான் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபாலா ஆல்டோ என்ற நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் சிஇஓ நிகேஷ் அரோரா என்பவர் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். மேலும் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா ஆகியவர்கள் கூட அடுத்தடுத்த இடத்தில் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள ஏர்போர்ஸ் பப்ளிக் பள்ளியில் படித்த நிகேஷ் அரோரா அதன்பிறகு கூகுள் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிறகு ஜப்பானில் உள்ள சாஃப்ட் பேங்க் என்ற வங்கியில் பணிபுரிந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஃபாலோ ஆல்டோ பட்டியலில் என்ற நிறுவனத்தில் நெட்வொர்க் சி.இ.ஓவாக  பணியாற்றி வருகிறார்.

இவர் தான் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ பத்தாவது இடத்தில் உள்ளார் என்பதும், முதல் இடத்தில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டியலில்  151.43  மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் முதல் 500 இடங்களில் 17 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts