அமைதியின் சிகரம் அமீர்கான்.. நம்மூர் விக்ரம், சூர்யாவுக்கெல்லாம் முன்னோடியான பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் உடலை வருத்தி, விதவிதமான கெட்டப்களில் வரும் நடிகர்களில் விக்ரமும், சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர்கள். கதாநாயகன் என்பதைத் தாண்டி, கதையின் நாயகன் என்ற கோணத்திலேயே நடித்து வருகின்றனர். இவர்களது படங்களில் கமர்ஷியலைத் தாண்டி இவர்களது அபார உழைப்பு இருக்கும். அதனால் தான் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரைமே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாலிவுட் படங்களில் தனக்கான தனி முத்திரையைப் பதித்து இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறார் அமீர்கான். நம்மூர் விக்ரம், சூர்யாவுக்கெல்லாம் முன்னோடியான இவர் தீவிர சினிமா காதலராவார். மேலும் உலகின் முக்கிய பிரபலங்கள் பட்டியலில் அமீர்கானுக்கும் இடம் உண்டு.

பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் கோலோச்சி வந்த அமீர் கான், இந்தி சினிமாவின் ஆல்டைம் க்ளாசிக் மெகா ஹிட் படமான ’யாதோன் கி பாரத்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தின் இயக்குநர் அவரது மாமா நசீர் ஹூசைன்.

தொடர்ந்து 1988ஆம் ஆண்டு ’கயாமத் சே கயாமத் தக்’ படம் மூலம் ஜூஹி சாவ்லாவுடன் அறிமுக நாயகனாக பாலிவுட் பயணத்தில் கால் பதித்தார் அமீர் கான். இந்தியா முழுவதும் பட்டி தொட்டியெங்கும் தன் முதல் படத்திலேயே போய் சேர்ந்த அமீர்கான், தொடர்ந்து சாக்லேட் ஹீரோவாகவும், பின் டிராக் மாறி இயக்குநர்களின் ஹீரோவாகவும் தன்னைத் தகவமைத்து ஹிட் கொடுத்து பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

நடிகர் தங்கவேலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படி ஓர் ஒற்றுமையா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்

இவரது தங்கல், லகான் போன்ற படங்களைப் பார்த்தால் இவர் இந்தி சினிமாவில் எப்படிப்பட்ட ஆளுமை உள்ளவர் என்பது புரியும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அமீர்கான் சில கொள்கைகளைக் கொண்டிருக்கிறார். லண்டனிலுள்ள மேடம்டுஷாட் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில், ஆமிர்கான் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதைத் திறந்துவைக்க அழைக்கப்பட்டும், ஆமிர்கான் மறுத்துவிட்டார். இந்திய திரைப்பட விருதுகள் விழாக்களில், சில விருதுகளுக்கு அமீர்கான் தேர்வான போதும், ஆமிர்கான் அவற்றில் பங்கேற்கவும் இல்லை; விருதுகளை வாங்கவுமில்லை.

பாரதியார் வேடத்திற்கு முகவரி கொடுத்த பழம்பெரும் நடிகர்… இப்படி ஒரு நடிகரை கொண்டாடத் தவறிய தமிழ் சினிமா!

மேலும் அமீர்கான் தனிமையையும், நிதானத்தையும், கட்டற்ற தனி சுதந்திரத்தையும் மிகவும் விரும்புபவர். இவை வெகுவாகக் கிடைக்காத சூழல் உருவாகும்போது, சமூக ஊடகத் தொடர்புகளிடமிருந்து, சிறிது காலத்திற்குத் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொள்வார். கொஞ்சம் வித்தியாசமான மனிதராகத்தான் இருப்பாரு போலயே..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.