சிவகுமார் வரைக்கும் இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க!.. இனியாவது மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்தில் புகுந்த ஆமை என்பதில் தொடங்கி 100 திருக்குறள் சொல்லும் சிவகுமாருக்கு இந்த ஒரு திருக்குறள் தெரியாதா என கரு. பழனியப்பன் வரை கேட்க ஆரம்பித்து விட்டனர்.

16 வருஷத்துக்கு முன்னாடி வெளியான பருத்திவீரன் படத்தை உருவாக்கும் போது சொன்ன பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டுக்கு படம் எடுத்து விட்டார் அமீர் என்றும் தனது காசுல தான் சினிமாவையே அவர் கற்றுக் கொண்டார். அமீர் ஒரு திருடன் என வாய்க்கு வந்தபடி ஞானவேல் ராஜா யூடியூப்களில் பேட்டி அளித்து வருகிறார்.

வலுக்கும் அமீர் – ஞானவேல்ராஜா மோதல்:

ஆனால், இந்த பக்கம் ஞானவேல் ராஜாவின் பேச்சை கண்டிக்கும் யாருமே வரம்பு மீறி பேசாமல் திரு. ஞானவேல் ராஜா என்றே அழைத்து பேசி அவர் பேசுவதும், அவரது ஏளன உடல் மொழியையும் தான் கண்டித்து வருகின்றனர்.

சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாரதிராஜா, கரு. பழனியப்பன் என தொடர்ந்து நாளுக்கு நாள் இயக்குனர் அமீருக்கு ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது. ஆனால், அந்த பக்கம் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள நடிகர் கார்த்தி மற்றும் அவரது அண்ணன் நடிகர் சூர்யா இருவரும் எந்தவொரு விளக்கமும் சமாதானம் செய்ய எந்தவொரு முயற்சியும் செய்யாமல் 16 வருஷத்து பகை என அப்படியே அதை வளர்த்து வருவது சரியான விஷயம் இல்லை என சினிமா வட்டாரங்கள் பேச ஆரம்பித்துள்ளன.

மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?

நடிகர் சூர்யாவுடன் அமீர் வாடிவாசல் படத்தில் இணைந்து நடிக்கப் போவது உறுதி என்பதை இயக்குநர் வெற்றிமாறனும் போட்டோ வெளியிட்டு அறிவித்து விட்டார்.

ஞானவேல் ராஜா மற்றும் அமீர் விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் தான் சூர்யா குடும்பத்தினர் இதில் வாய் திறக்காமல் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அப்பா சிவகுமார் பற்றியெல்லாம் எதிர் தரப்பு பேசத் தொடங்கி வரும் நிலையில், இனியும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என சினிமா பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கங்குவா படப்பிடிப்பின் போது கேமரா விழுந்து அடிபட்ட நிலையில் நடிகர் சூர்யா ஓய்வுக்காக மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். நடிகர் கார்த்தி ஊட்டியில் ராம்குமார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.