தமிழ்த்திரையுலகை கலக்கிய அமானுஷ்ய ஆவி பாடல்கள்

பாடல் கேட்பது மிகவும் சுகமானது. அதிலும் உலக வாழ்வை விட்டு நீங்கிய ஆன்மாவானது பாடும் பாடல் எப்படி இருக்கும். அதன் ஏக்கங்கள் எப்படி இருக்கும் என தமிழ் திரையுலகத்தை ஆட்சி செய்த இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களுமே உணர்ந்திருக்கிறார்கள்.

bd13d15cabe563a92d051226a14ef601-1

வெள்ளையாக சேலை உடுத்திக்கொண்டே சினிமாக்களில் பெண்ணின் ஆவிகள் பாடும் பாட்டில் ஒரு அமானுஷ்யம் திகில் இருந்தாலும், மிகவும் மனதை வருடும் வகையில் அப்பாடல்கள் இருக்கும் என்பதை பல திரைப்படங்களில் வந்துள்ள ஆவிப்பாடல்கள் நமக்கு காட்டுகின்றன.

அந்தக்காலத்தில் வெளிவந்த அதே கண்கள் திரைப்படம் பேய்ப்படமல்ல ஒரு சஸ்பென்ஸ் படம்தான் இருந்தாலும் படத்தின் சூழலுக்கேற்ப ஒரு பாடல் வரும் வா அருகில் வா தா உயிரை தா என்ற பாடல்தான் பாடல் வரிகளே திகில் ஊட்டினாலும் மிகவும் இனிமையான பாடல் இன்றளவும் கேட்க கூடிய பாடல் இது இப்பாடலுக்கு இசையமைத்தவர் வேதா அவர்கள்.

இது போல துரை இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே வெண்மேகமே என்ற பாடல் மிகவும் அமானுஷ்யமான பாடலாகும் கேட்பதற்கு மிக இனிமையான பாடலும் கூட அந்த நேரத்தில் பலரால் விரும்பி கேட்கப்பட்டு ஹிட் அடித்த பாடல் இது.இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி அய்யா அவர்கள்.

இதே போல் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பில் வந்த அண்ணன் ஒரு கோவில் படத்தில் குங்கும கோலங்கள் கோவில் கொண்டாட பாடலையும் சொல்லலாம் இதற்கும் அய்யா எம்.எஸ்.வி அவர்கள்தான் இசையமைத்திருந்தார். கொஞ்சம் அமானுஷ்யம் கலந்தே இப்பாடல் இருக்கும்.

எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த துணிவே துணை படத்தின் முதல் 20 நிமிட காட்சிகள் மிகுந்த பரபரப்பாகவும் பயமாகவும் இருக்கும். ஒரு மாட்டுவண்டி, அந்த நடுநிசி நேரத்தில் ரயில்வே ஸ்டேசனிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக செல்லும் மாட்டு வண்டிக்காரன், மாட்டு வண்டியில் ஒரு போலீஸ் ஆபிசர் அருகே ஒரு மரத்தில் ஆவி நின்று கொண்டு பாடும் பாடலாக ஆகாயத்தில் தொட்டில் கட்டும் என்ற பாடல் கேட்பர்களை கிறங்கடித்தது என்றாலும் கொஞ்சம் திகிலடித்தது என்பதும் உண்மை. இப்பாடலுக்கும் மறைந்த அய்யா எம்.எஸ்விஸ்வநாதன் அவர்கள்தான் இசையமைத்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த நல்ல நாள் படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வரும் ஜானகியம்மாவின் குரலில்வெட்ட வெளி பொட்டலில நட்ட நடு ராவினிலே என்ற பாடல் திகில் அமானுஷ்யம் கலந்து இருந்தாலும் மிகவும் இனிமையான பாடலாகும்.

மனோபாலா இயக்கத்தில் வந்த பிள்ளை நிலா படத்தில் வரும் ராஜா மகள் ரோஜா மகள் பாடலை கூறலாம். இதுவும் ஒரு ஆவிப்பாடல்தான் என்றாலும் கடும் அமானுஷ்ய ஃபீல் இப்பாடலில் இருக்காது .இனிமையான ஃபீல் மட்டுமே இருக்கும்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திகில் படமான நூறாவது நாளில் வரும் உருகுதே இதயமே அருகிலே வாராய் என்ற பாடல் சான்ஸே இல்லை அவ்வளவு இனிமை அப்பாடலில் இருக்கும், கதைப்படி கொலை செய்யப்பட்டு இறந்த கதாநாயகியின் அக்காவின் ஆவி போல அதன் வேதனைகளை சொல்வது போலவும் மிகவும் இனிமையாக அதே நேரத்தில் கடும் அமானுஷ்ய ஃபீல் கொடுத்து அப்பாடலை பாடி இருந்தார் வாணி ஜெயராம் அவர்கள். அருமையாக இப்பாடலை இளையராஜா படைத்திருந்தார்

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் வந்த ஆவிப்பாடல்களை பாடகி வாணி ஜெயராம்தான் பாடி இருக்கிறார்.

இது போல் ஆவி என்றாலும் அதற்கும் இனிமையாக பாடும் திறன் உண்டு, அதன் ஏக்கங்களை சொல்கிறது என்ற வகையிலேயே பல படங்களில் பாடல்கள் வந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...