அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்ட அமைதிப் படை சீன்… ஆஸ்கரையே அலற வைத்த மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணி!

தமிழ் சினிமாவில் இவர்கள் காம்போ என்றாலே கலகலப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது. நடிகர் சத்யராஜ், இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன. மேலும் மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார். இவர்கள் காம்போவில் எந்தக் காலத்திலும் பேசப்படும் முத்தான ஒரு படமென்றால் அது அமைதிப் படை படம் தான். தேர்தல், அரசிய்ல் நையாண்டிப் படமாக எந்தக் கால அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் ஒரு படமாக அமைதிப் படை இருந்து வருகிறது.

மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் உருவான அமைதிப் படையில் அமாவாசையாக நடிப்பில் அசத்தியிருப்பார் சத்யராஜ். படம் பெயருக்குத்தான் அமைதிப் படையே தவிர படம் முழுக்க கைதட்டல்கள் விழும் அளவிற்கு இருவரின் நடிப்பும் அபாராமாக இருக்கும். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

படம் படு தோல்வி : வாங்கிய சம்பளப் பணத்தை அப்படியே திருப்பி அளித்த நடிகை கே.ஆர்.விஜயா

நடிப்பின் போது உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தின் காட்சியே பாடமாக இடம்பெற்றிருக்கிறது. படத்தின் கதையின் படி தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியாகும் போது ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் வரவர சேரில் உட்காருவதில் படிப்படியாக முன்னேற்றம் காட்டுவார். மேலும் காதலியின் தோற்றமும் கண்ணை மறைக்க்கும்.

5000 ஓட்டில் இருந்து 50000 ஒட்டு 5ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடனே சேர் போட்டு அமரும் சத்யராஜ், 8ஆயிரத்தில் லேசாக நகர்வார். 15, ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடன் சாய்ந்து அமர்வார். 25,000 ஓட்டு முன்னணி என்ற உடன் சிகரெட்டை நன்றாக இழுத்து புகையை விடுவார். கீழே புகையை விடலாமா என்று யோசித்து பின்னர் மேல் நோக்கி புகையை விடுவார்.

35,000 ஓட்டு முன்னணி என்ற உடன் கால் மேல் கால் போட்டு அமர்வார். இதனைப் பார்த்த மணிவண்ணன் ஆடிப்போய்,“அமாவாசை நீயா இப்படி என்று கேட்க? நாகராஜசோழன் என்று தெனாவெட்டாக பதிலளிப்பார். 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்று அறிவித்த உடன் கண்ணாடி அணிந்து அசல் அரசியல்வாதியாக நடிப்பில் கெத்து காட்டுவார் சத்யராஜ்.

175 நாட்களைக் கடந்து திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய அமைதிப் படை படம்தான் என் நண்பன் எனக்குக் கொடுத்த ஆஸ்கர் விருது என்று மணிவண்ணன் இறப்பில் சத்யராஜ் கண்ணீர் மல்க பேசியிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.