விடாமுயற்சி படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த இரண்டு படங்கள்.. தயாரிப்பாளர் இவங்களா? செம்ம அப்டேட்

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித்குமார், சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து இருந்தார்.

WhatsApp Image 2023 06 20 at 9.40.11 PM 3

பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சண்டிகர் மற்றும் புனே நகரங்களில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.

WhatsApp Image 2023 06 20 at 9.40.11 PM 1

இந்நிலையில் நடிகர் அஜித், அடுத்ததாக தனது 63-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த 64-வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அஜித் நடித்து கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் 63-வது படம் 2024 ஆம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா, அட்லீ , ஏ. ஆர். முருகதாஸ் அல்லது தெலுங்கு இயக்குனர் சுகுமார் ஆகியோர் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...