Good Bad Ugly… தங்க மனசுங்க அஜித்துக்கு.. பர்ஸ்ட் லுக் சீக்கிரமா ரிலீசாக காரணமா இருந்த விஷயம்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்போது இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி இருப்பது போன்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பிம்பம் உருவாகி இருக்கும். அந்த வகையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனை தொடர்ந்து, அஜித் குமார் மற்றும் விஜய் படங்கள் வெளியாகும் சமயத்தில் இரண்டு பேரின் ரசிகர்களும் மாறி மாறி ஏதோ யுத்தத்திற்கு ஆயத்தமாவது போல தயாராவார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கூட, பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி, கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருவரின் ரசிகர்களும் அந்த சமயத்தில் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக, இரண்டு திரைப்படங்களும் வெற்றி படமாக மாறி இருந்தது.

இதனிடையே, நடிகர் அஜித் குமார் ஆண்டிற்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என நடிக்க, நடிகர் விஜய் 2 படங்கள் வரை ஒரு வருடத்திற்கு நடித்து வந்தார். அப்படி இருக்கையில், விஜய் அரசியலில் நுழைய கோட் மற்றும் இன்னொரு படத்துடன் தனது திரை பயணத்தை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

மறுபுறம் நடிகர் அஜித் குமார், துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட, பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இதன் சண்டைக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி அதிகம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதன் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வர, அஜித் குமாரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பும் வெளியானது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘Good Bad Ugly’ என்ற படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ளார். 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, யாரும் எதிர்பாராத நேரத்தில் Good Bad Ugly படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

சீரியஸ் கதாபாத்திரம் இல்லாமல், மிகவும் ஜாலியாக அஜித் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. அப்படி இருக்கையில், Good Bad Ugly பர்ஸ்ட் லுக் சீக்கிரம் வெளியான காரணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

‘Good Bad Ugly’ படத்தின் பிரத்யேக லுக்கில் அஜித் இருந்ததால், அது வெளியே லீக் ஆகிவிடக்கூடாது என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் அவருடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் போது அவை லீக்காகி விடும் என்பதால் இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கவனித்த அஜித், ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுப்பது தடைபட விடக்கூடாது என்பதற்காக பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

படத்தின் பெயரில் ரசிகர்கள் மனம் வருந்தி போகக் கூடாது என்ற நோக்கில் அஜித் எடுத்த முடிவு, பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts