நான் கிரே ஹேர் குழந்தையப்பா!.. மகனுக்காக கிரவுண்டில் இறங்கி ஃபுட்பால் ஆடிய அஜித் குமார்.. செம வைரல்!

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தற்போது சென்னையில் உள்ள தனது மகனுடைய ஃபுட் பால் கிரவுண்டில் களமிறங்கி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் உள்ள ஆர்வத்தினால் அதில் கலந்துகொண்டு சென்னையில் உள்ள பிரபல கிளப் ஒன்றின் ஜூனியர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆத்விக் மற்றும் அவரது குழு ஒரு கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

விடாமுயற்சி விரைவில் வருகிறது:

நடிகர் அஜித் தனது அடுத்த படமான ‘ விடாமுயற்சி ‘ படப்பிடிப்பில் இருந்ததால் தனது மகனின் வெற்றிவிழாவில் பங்கேற்க்க இயலவில்லை. இருப்பினும், அஜித்தின் மனைவி ஷாலினி ஆத்விக் உடன் கலந்துக்கொண்டு தனது மகனுக்காக உற்சாகப்படுத்தத் தவறவில்லை. ஆத்விக் கால்பந்தில் சிறப்பாகச் சாதிப்பார் என அஜித் ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம், ஆக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அஜித்துடன் திரிஷா, ரெஜினா கசாண்டரா, ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் ஷெட்யூலை முடித்துவிட்டு, அடுத்து சார்ஜாவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோருக்கு அடுத்தபடியாக விஜய் – அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அஜித்தின் படங்கள் ஒன்றாக ரீலிஸானால் எது அதிக பாக்ஸ் ஆபிஸ் எடுக்கும் என ரசிகர்களுக்குள் போட்டி இருந்ததது.

மகனுக்காக கால்பந்து விளையாடிய அஜித்:

விஜய் தனது திரையுலகின் வளர்சியை பயன்படுத்தி சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். ஆனால் சினிமாவை தொழிலாக மட்டும் பார்த்து எந்த ரசிகர் சங்கமும் வைத்துக்கொள்ளாமல் எந்த நிகழ்சியிலும் கலந்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் இவர் தான் ரியல் ஹிரோ என அஜித்தின் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அஜித் நடிகராக மட்டும் இல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் மேக்கிங் என அனைத்தையும் விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல், அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் சிறந்த பேட்மிண்டன் பிளேயர் என்பது குறிப்பிடதக்கது. இவர்களைப் போல மகன் ஆத்விக்கும் ஃபுட் பால் விளையாட்டில் அதிக ஈடுப்பாடுடன் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் பிரேகில் தன் மகனின் ஃபுட் பால் கிரவுண்டில் பந்தை உதைத்து அஜித் விளையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.