ஐஸ்வர்யா ராஜேஷின் புதுப்பட பூஜை… கலந்து கொண்டு வாழ்த்திய முக்கிய பிரபலம்…

சின்னத்திரையில் தோன்றி வெள்ளித்திரையில் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி தனக்கென ஒரு தனிப்பாதையை வழிவகுத்து பயணித்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மோகன்தாஸ், கருப்பர் நகரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கதையின் நாயகியாக ‘பூமிகா’, ‘பர்ஹானா’ போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ‘வளையம்’ என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகி கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மனோபாரதி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் அறிமுக நாயகன் தேவ் நடிக்கவுள்ளார். சேத்தன், தமிழ் ,பிரதீப், ருத்ரா, ஹரிஷ் பேராடி, சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். லிஃப்ட் பட புகழ் மைக்கேல் பிரிட்டோ படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சயின்ஸ் பிக்சன் படமாக ‘வளையம்’ இருக்குமென படக்குழுவினர் தெரிவித்தனர்.

aishwarya rajesh
vijay sethupathi

இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக ‘வளையம் ‘ பட பூஜையில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷையும் படக்குழுவினரையும் வாழ்த்தினார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இளம் திறமைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வாய்ப்பளித்து ஊக்குவித்து வருபவர். இதற்கு எடுத்துக்காட்டாக ‘மரகத நாணயம்’, ‘ராட்சஷன்’, ‘பேச்சுலர்’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களை கூறலாம். இதன் வரிசையில் ‘வளையம் ‘ திரைப்படமும் இடம்பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...