AI தொழில்நுட்பத்தால் வேலையிழக்க போகும் செய்தி வாசிப்பாளர்கள்.. இனிமேல் இதுதான்..!

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பத்தால் ஏற்கனவே பல துறைகளில் வேலை இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் AI தொழில்நுட்பம் நுழைந்து விட்டதால் செய்தி வாசிப்பாளர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியை நிறுவனம் லிசா என்னும் AI தொழில்நுட்ப செய்தி வாசிக்கும் டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளது. இதன் அறிமுகவிழா சமீபத்தில் நடந்த நிலையில் லிசாவின் செய்தி வாசிப்பை பார்த்து பார்வையாளர்கள் அசந்து கூறினார்

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் லிசா செய்தி வாசிக்கும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டது. இது தொலைக்காட்சி ஊடகத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒடியா மற்றும் ஆங்கில உள்பட 18 மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன் லிசாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தொலைக்காட்சி செய்தி சேனல்களில் செய்தி வாசிக்கும் ஆண் மற்றும் பெண்கள் சுமார் ரூ.50,000 வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பைசா செலவில்லாமல் இந்த டெக்னாலஜி மூலம் செய்தி வாசிக்க வைத்து விடலாம் என்றும் மனிதர்களை விட மிகவும் அழகாகவும் நிறுத்தி நிதானமாகவும் இந்த லிசா செய்தி வாசிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் ஆரம்பித்த இந்த AI டெக்னாலஜி செய்தி வாசிப்பாளர் அனைத்து தொலைக்காட்சியிலும் பரவுவதற்கு நீண்ட நாள் ஆகாது என்றும் இதனால் செய்தி வாசிப்பாளர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மனிதர்களைப் போல சரளமாக லிசா இப்போதைக்கு பேசவில்லை என்றாலும் விரைவில் அதன் தரம் மேம்படுத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஓடிவி சேனலின் வர்த்தக பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் செய்தி வாசிப்பாளர் வேலைக்கு ஆப்பு வைத்துள்ளது இந்த AI டெக்னாலஜி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews