அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் அணிகள்: எத்தனை கோடி தெரியுமா?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15வது ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்படும் என்றும் இதனை அடுத்து தற்போது உள்ள எட்டு அணிகளுடன் கூடுதலாக இரண்டு அணிகளின் இணைக்கப்பட்டால் மொத்தம் 10 அணிகள் அடுத்த ஆண்டு விளையாடும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகளின் ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று மதியம் அந்த ஏலம் நடத்தப்பட்டது என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு அணிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. லக்னோ என்ற அணி ஐபிஎல் தொடர்களில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அணியை 7 ஆயிரத்து 90 கோடிக்கு ஆர்பிஎஸ்ஜி என்ற நிறுவனம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் குஜராத்தை சேர்ந்த அகமதாபாத் அணி புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியை சிவிஎஸ் கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் 5200 கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.