தமிழகம்

மகாராஜா படத்தை பார்த்துவிட்டு இந்தக் கதாபாத்திரத்தில் நீங்க ஏன் நடிச்சீங்க அப்படினு ரசிகர்கள் கோபப்படுறாங்க… சிங்கம்புலி எமோஷனல்…

சிங்கம்புலி தேனி பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் இயற்பெயர் ராம் சத்யா என்பதாகும். பெங்களூரில் பொறியியல் படித்து விட்டு திரைப்பட தொழிலுக்காக சென்னை வந்தவர். சிங்கம் புலி தமிழ் சினிமாவின் இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர்.

ஆரம்பத்தில் இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டே சில படங்களுக்கு வசனங்களை எழுதி வந்தார் சிங்கம்புலி. 2002 ஆம் ஆண்டு அஜித் அவர்களை வைத்து அதிரடி திரைப்படமான ‘ரெட்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார்.

பின்னர் 2005 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகாவை வைத்து ‘மாயாவி’ திரைப்படத்தை இயக்கினார். இவ்விரு படங்களும் நல்ல விமர்சணங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக ஓடியது. 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா சிங்கம் புலி அவர்களை ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க வைத்து நடிகராக அறிமுகம் செய்து வைத்தார்.

நடிப்பில் ஆர்வமும், மக்களின் வரவேற்பும் கிடைக்கவே தொடர்ந்து சிங்கம் புலி அவர்கள் துணை வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து பிரபலமானார். ‘மிளகா’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மனம் கொத்தி பறவை’, ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்கார துரை’, ‘கருப்பன்’, ‘மன்னர் வகையறா’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் சிங்கம்புலி நடித்தவைகளில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிங்கம்புலி அவர்கள் யாரும் எதிர்பாக்காத நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இதைப் பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் எமோஷனலாக பேசியுள்ளார் சிங்கம்புலி. அவர் கூறியது என்னவென்றால், ‘இவ்ளோ நாள் எங்களை சிரிக்க வச்ச நீங்க இந்த நெகட்டிவ் கதாபாத்திரத்தை எப்படி தேர்ந்தெடுத்து நடிச்சீங்க அப்படினு ரசிகர்கள் கோபப்படுறாங்க. நான் ஒண்ணே ஒன்னு தான் சொல்வேன், நான் ஒரு நடிகன், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். அதை நடிப்பா பாருங்க என்று கூறியுள்ளார் சிங்கம்புலி.

Published by
Meena

Recent Posts