ஜியோவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. இனி வாட்ஸ் அப் கால் தான் சரியா இருக்கும்..!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைத்தொடர்பு துறையில் கால் வைத்த முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆரம்பத்தில் இலவச இன்டர்நெட் வசதியை கொடுத்தது என்பதும் அதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிற நிறுவனத்திலிருந்து விலகி ஜியோ நிறுவனத்தின் சிம்கார்டை வாங்கினார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று ஜியோ நிறுவனம் அதிரடியாக ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் பலர் ஏர்டெல் சிம்மிற்கு மாற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று ஏர்டெல் நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொபைல் கட்டணங்களில் திருத்தம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இலவசமாக பேசும் வசதி வந்து விட்ட நிலையில் பெரும்பாலானோர் அந்த வசதியை தான் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பேச வேண்டும் என்றால் வாட்ஸப் கால் மூலம் தான் பேசப்பட்டு வருகிறது என்பதும் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசினால் இன்டர்நெட் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதும் தனியாக பேசுவதற்கு கட்டணம் இல்லை என்பதும் தெரிந்தது.

வாடிக்கையாளர்கள் பலரும் இன்டர்நெட் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கால் பேசி வரும் நிலையில் தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி வருவது பயனாளிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இன்டர்நெட் மூலம் பேசும் வசதி வந்துவிடும் என்றும், செல்போன் தேவைப்படாது என்றும் கூறப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts