பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா வாழ்க்கை வரலாறு.. சிக்கலில் மாட்டிய தனியார் பள்ளி..இது கொஞ்சம் ஓவரா தெரியல..

பெங்களுரூ : பொதுவாக பள்ளிப் பாடபுத்தகத்தில் மாணவர்கள் கடந்த வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக வரலாற்றுப் பாடம் பாடம் பயிற்றுவிக்கப்படுவது நடைமுறை. இந்த வரலாற்றுப் பாடத்தில் மன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள், சமூகப் பெரியோர்கள், வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றவர்கள், பல துறை வித்தகர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

மாணவர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து தாமும் அவர்களைப் போல் வாழ்க்கையில் முன்னேற, ஜெயிக்க வேண்டும் என்று அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காகவே இதுபோன்ற வரலாற்றுப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஆனால் பெங்களுரில் உள்ள சிந்தி என்ற ஒரு தனியார் பள்ளியில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் நபரின் பெயரைக் கேட்டால் ஒருகனம் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள். அவர் வேறுயாருமல்ல. பிரபல சினிமா நடிகை தமன்னா தான். கேட்டதும் ஆச்சர்யமாக உள்ளதா? ஏற்கனவே தமன்னா வாழ்க்கை முறைப் பயிற்சியாளர் லூக் காவ்டின் ஹோ என்பவருடன் இணைந்து பேக் தி ரூட்ஸ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ரிவர்ஸ்-ல் அமைந்த பாட்டு.. குழம்பிப் போன தேவி ஸ்ரீ பிரசாத்.. கமல் சொன்ன அந்த அட்வைஸ்

இந்நிலையில் தமன்னாவின் வாழ்க்கை வரலாறு மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பள்ளியிலம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சிந்தி என்ற அந்தப் பள்ளியில் 7-ம் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதனைக் கண்ட மாணவர்களும், பெற்றோரும் ஷாக் ஆகினர். சினிமா நடிகை வரலாறு மாணவர்களுக்கு எதற்கு என்று பெற்றோர் கோபம் கொண்டு பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர். 2005-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தமன்னா தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து பையா, அயன், பாகுபலி, சிறுத்தை, வீரம், ஜெயிலர் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் அவர் நடித்த அரண்மனை 4 திரைப்படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...