அருணாச்சலம் திரைப்படத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்த நடிகை ரம்பா!

தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு உழவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ரம்பா. அதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி என பழமொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார் நடிகை ரம்பா. படங்களை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சின்னத்திரை தொலைக்காட்சி கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

அந்த வகையில் நடிகர் ரம்பா மற்றும் சூப்பர் ஸ்டார் இணைந்து நடித்த அருணாச்சலம் திரைப்படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து நடிகை ரம்பா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா, மனோரம்மா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் அருணாச்சலம். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிகை ரம்பா நடிகர் விசுவின் மகளாக நடித்திருப்பார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை அந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அருணாச்சலம் படத்தின் சூட்டிங் சமயத்தில் நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக சல்மான் கான், ஜாக்கிசரஃப் என பாலிவுட் நடிகர்கள் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்த நடிகை ரம்பா வரவேற்கும் விதத்தில் அருகில் சென்றுள்ளார். அப்போது நடிகை ரம்பா சல்மான் கானுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளதால் பாலிவுட் ஸ்டைலில் அவருக்கு கட்டிப்பிடித்து தன் வணக்கத்தை கூறியுள்ளார். பொதுவாக மும்பையில் ஹீரோக்களை பார்க்கும் மற்ற பிரபலங்கள் கட்டிப்பிடித்து வணக்கம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். இதை பார்த்த ரஜினி சில மணி நேரங்களுக்கு பின் மிகப்பெரிய டிராமா ஒன்றை நடத்தி தன்னை அழ வைத்ததாக கூறியுள்ளார். தன் தோள் மேல் உள்ள துண்டை வேகமாக கீழே போடுவது, செட்டில் சிலரிடம் கோபமாக பேசுவது என டென்ஷன் ஆக மாறியுள்ளார் ரஜினிகாந்த்.

செட்டில் உள்ள அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை அப்படி பார்த்ததே இல்லை. மேலும் ரஜினியின் இந்த செயல்பாடுகளை கவனித்த மற்ற நபர்கள் அடுத்ததாக நடிகை ரம்பாவை பார்த்தனர். ரஜினியை பார்த்துவிட்டு அடுத்ததாக தன்னை பார்ப்பதற்கான காரணத்தை ரம்பாவால் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் நீங்கள் என்று மற்றவர்கள் கூறியதுடன் ரம்பா உடனே அழ தொடங்கி விட்டார். உடனே ரஜினி குழந்தையை யாருடா அழ வைத்தது என கேட்ட உடன் ரம்பா அழுகையை நிறுத்தியுள்ளார். அதன் பின் செட்டில் உள்ள மற்றவர்களை அழைத்து நமக்கெல்லாம் செட்டில் நடிகை ரம்பா எப்படி வணக்கம் வைப்பாங்க என நடித்துக் காட்டிய ரஜினிகாந்த், சல்மான் கானை பார்த்தவுடன் நடிகை ரம்பா கட்டிப்பிடித்து வணக்கம் வைத்ததை கூறி கலாய்த்துள்ளார்.

நிறைவேறாமல் போன கமலஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல்! வைரலாகும் வீடியோக்கள்!

மேலும் தென்னிந்திய நடிகர்கள் எல்லாம் இழிச்சவாயன்களா.. உங்க ஆட்களுக்கு மட்டும் கட்டிப்பிடித்து வணக்கம் சொல்லுவீங்களா என நடிகை ரம்பாவிடம் நகைச்சுவையாக பேசி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படித்தான் செட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை ரம்பா உடன் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்திற்கு பின் நடிகை ரம்பா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews